உள்ளூராட்சி தேர்தலுக்காக கொழும்பில் ஆர்ப்பாட்டம்; அரசுக்கு ஜே.வி.பி எச்சரிக்கை!
உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை நடத்தும் போராட்டத்திற்கு நீதி மன்றம் நீதியான தீர்வை வழங்கா விட்டால் நாடளாவிய ரீதியில் போராட்ட ங்களை முன்னெடுத்து தேர்தலை நடத்துவதற்கான அழுத்தங்களைப் பிர யோகிக்க தீர்மானித்துள்ளதாக ஜே.வி.பி தெரிவித்துள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலை வர் மஹிந்த தேசப்பிரியவை இன்றைய தினம் காலை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா இவ் எச்சரிக்கையை விடுத்துள்ளாா.
உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் வர்த்தமானி அறிவிப்புக்கு எதிராக 6 மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இதனால் அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்ட உள்ளூரா ட்சி மன்றங்களுக்கான தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்படும் சாத்தியம் காண ப்படுகின்றது.
இந்த நிலையில் இது தொடர்பாக கலந்துரையாடுவதற்காக ஜே.வி.பியின் பொதுச் செலயாளர் ரில்வின் சில்வா, அக்கட்சியின் சட்டத்தரணியான சுனில் வட்டகல உள்ளிட்டோர் கொழும்பு இராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் ஆணை க்குழுவிற்கு இன்று முற்பகல் விஜயம் செய்தனர்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுடன் சந்தி ப்பை நிறைவு செய்ததன் ஊடகங்களுக்கு ரில்வின் சில்வா தெளிவுபடுத்தி னார்.
“உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் குறித்து பேச்சு நடத்துவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவரை சந்திக்க இன்று நாங்கள் வந்தோம். விசேடமாக நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருப்பதால் சில உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சுதந்திரக் கட்சியிலுள்ள சிலர் இந்த மனுக்களை தாக்கல் செய்தமையே இதற்கான காரணமாகும். இது மிகவும் பிழையான, ஜனநாயக விரோத செயல். சுதந்திரக் கட்சி தேர்தலை பிற்போடச் செய்ததன் நோக்கம் அவர்கள் தேர்த லுக்கு அச்சம். கட்சியிலுள்ள பிளவு நிலையை சரிப்படுத்த காலம் அவர்க ளுக்குத் தேவை.
எனவே தான் தேர்தலை பின் தள்ளிப் போடுவதற்காக நீதி மன்றத்தை நாடியு ள்ளனர்.
எனினும் அந்த முயற்சி தோல்வியடையவுள்ளது. 200 சபைகளுக்கான தேர்தலை நடத்த முடியாது என்ற போதிலும் 100 வரையான சபைகளுக்கான தேர்தலை நடத்த முடியும்.
அதற்கான தேர்தலை நடத்தினால் சுதந்திரக் கட்சியின் முயற்சி தோல்வி யடையும். இந்த சூழ்ச்சி அமைச்சர் பைசர் முஸ்தபாவுக்குத் தெரிந்தே இடம்பெ றுகிறது.
இன்று நாங்கள் அமைச்சர் முஸ்தபாவுக்கு எதிராக பிரேரணையை சபாநாயகரிடம் கையளித்தோம்.
அது தவிர, நீதிமன்றத்தில் எமக்கு தீர்வு கிடைக்காவிட்டால், நாடளாவிய ரீதியில் வீதிப் போராட்டங்களை செய்ய திட்டமிட்டுள்ளோம். அதன் முதற்கட்டமாக எதிர்வரும் 30ஆம் திகதி கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்த வுள்ளோம்.
எனவே தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை எமது போராட்டங்களுக்கு முன்னதாக வாபஸ் பெற்றுக்கொள்ளுமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொ ள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.