Breaking News

மலசலகூட குழியில் விழுந்து 3 வயது சிறுவன் பரிதாப மரணம்!

அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட அஷ்ரப் நகர் கிராமத்தில் மலசல கூடத்திற்காக வெட்டப்பட்டிருந்த குழியில் வீழ்ந்து சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   

இச்சம்பவம் நேற்று (27) காலை நடைபெற்றுள்ளது.  அம்பாறை மாவ ட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக பெய்து வரும் அடை மழை காரண மாக வீட்டின் ஓரமாக வெட்டப்பட்டி ருந்த குழியில் நீர் நிரம்பியுள்ளது. இந்நிலையில் அப்பக்கமாக விளை யாடிக் கொண்டிருந்த மூன்று வயது டைய சவுறுதீன் ஹிமாஸ் அஹ்தி என்ற சிறுவன் குழியில் தவறி வீழ்ந்து மரண மடைந்துள்ளார். வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறு வனைக் காணாது தேடியபோது அச்சிறுவன் வைத்திருந்த தடியொன்று நீரில் மித ப்பதை உறவினர் கண்டுள்ளனர். 

அக்குழியினுள் தேடிய போது சிறுவன் உயிரிழந்து சடலமாக காணப்பட்டதாக மரணமடைந்த சிறுவனின் குடும்பத்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.   மலசல கூடம் அமைப்பதற்காக வெட்டப்பட்டிருந்த குழியில் நிர்மாணப் பணி இடம்பெ றவிருந்த போதிலும் அடைமழை காரணமாக மலசலகூட நிர்மாணப் பணி பிற்போடப்பட்ட  நிலையில் இருந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.