அன்பு செழியனுக்கு ஆதரவு நல்கும் சீமான்.!
‘கம்பெனி புரொடக்ஷன்’ என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தின் இணை தயாரிப்பாளராக இருந்தவர் அசோக்குமார்.
கந்துவட்டி பிரச்சனையின் காரண மாக நேற்றைக்கு முன்தினம் தற்கொ லை செய்துள்ளார். அசோக்குமாரின் தற்கொலைக்கு காரணமென சினிமா பைனான்சியர் அன்பு செழியன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், "உண்மையைக் கூறி னால் அன்புச்செழியன் இல்லையெ னில் இங்கே பல பேர் திரைப்படமே எடுக்க முடியாது. அன்பு செழியன் யாரிடமும் என்கிட்ட வந்து பணம் வாங்கு என கூறவில்லை. நாம தான் விரும்பிப் போய் வாங்குகிறோம்.பல சாமா னியர்களை நம்பி அன்பு செழியன் பல கோடி ரூபாய் பணம் கொடுத்திருக்கி றார். அரசு வங்கியே ரூ1 லட்சம் கடனுக்கு கட்டி வைத்து அடிக்கவில்லையா?
கடனை கொடுத்தவர் கடுமையான முறையில் கேட்கிற போது தன்மான இழப்பாக கருதி உயிரிழப்பு ஏற்படுகிறது. அன்பு செழியன் போன்றவர்கள் பணம் கொடுக்க முடியாதெனக் கூறிவிட்டால் திரைப்படமே எடுக்க முடியாத நிலைதான் உருவாகும்.
"மார்வாடிகள் கொடுத்தால் அதற்கு பேரு பைனான்ஸ்... தமிழன் கொடுத்தால் கந்து வட்டியா?" எனவும் அசோக்குமாரின் தற்கொலை குறித்து கருத்து வழ ங்கியுள்ளார் சீமான்.