ஒற்றைக் காலில் கால்பந்தாடும் சீனாவின் நம்பிக்கை வீரர் (காணொளி )
ஒருகாலை இழந்த நிலையிலும் நம்பிக்கையைத் தளரவிடாது ஒற்றைக் காலில் கால்பந்து விளையாடும் சீன வீரர் ஒருவரின் காணொளி தற்போது வைரலாகியுள்ளதைத் தொடர்ந்து விளையாட்டு உலகம் அவர் பக்கம் திரும்பியுள்ளது.
ஹீ யியி என்ற 21 வயதாகும் மாற்றுத் திறனாளி கால் பந்து வீரரான இவர், புற்று நோயின் காரணமாக சிறு வய தில் தனது இடது காலினை இழக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு ஆளாகினார்.
தற்போது ஊன்றுகோல் மூலம் கால்பந்துப் போட்டிகளில் விளையாடிவரும் ஹீ, “ சிறகுகளை இழந்த தேவதை (Angel with Broken Wings) ”, “ ஒற்றைக் காலுடனான கால்பந்து ராஜா” (Ball King with One Leg)” மற்றும் “மாயாஜாலப் பையன் (Magic Boy)” போன்ற பெயர்களால் அழைக்கப்படுகின்றார்.
கண்காட்சிக் கால்பந்துப் போட்டியொன்றில் ஹீ விளையாடிய காணொளி தற்போது வைரலாகி இருக்கின்றது.
அக் காணொளியில் இவர் நுணுக்கமாக பந்தினை எடுத்துச் செல்வது, ஒரு மாற்றுத்திறனாளி வீரராக அவர் எதிர்கொள்ளும் சவால்களை அவரே கூறுவது போன்ற காட்சிகள் பதிவாகியிருக்கின்றன.