Breaking News

2 மணிக்குப் பின்னர் காலநிலையில் மாற்றம் - வளிமண்டலவியல் திணைக்களம் !

நாட்டில் பொரும்பாலான மாகாணங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

நாட்டில் சுமார் 100 மில்லிமீற்றர் மழை குறிப்பாக சப்ரகமுவ மாகாண த்திலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பெய்ய க்கூடும். புத்தளத்திலிருந்து காங்கே சன்துறை திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக மாத்தறை வரையில் காற்று வடகிழக்கு திசை யில் வீசுவதுடன் காற்றின் வேகம் 20 முதல் 30 கிலோமீற்றர் வேகத்தை கொண்டதாக இருக்கும். நாட்டைச் சுற்றியுள்ள ஏனைய கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் 10 முதல் 20 கிலோமீற்றர் வேகத்தினை கொண்டதாக காண ப்படும். காங்கேசன்துறை யிலிருந்து திருகோணமலை வரையிலான கடற்பிர தேசங்களில் காற்றின் வேகம் 40 முதல் 45 கிலோமீற்றருக்கு அதிகமான வேக த்தில் வீசும். 

 இடியுடன் கூடிய மழையின் போது இப்பிரதேசத்தில் தற்காலிகமாக 70 முதல் 80 கிலோமீற்றர் வரையிலான காற்று வீசுவதுடன் கடலும் கொந்தளிப்புடன் காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்து ள்ளது. 

 இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். இடி மின்னலிலிருந்து பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு திணை க்களம் இன்று தகவல் தெரிவித்துள்ளது.