பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க காலதாமதம் ஏன்? சாள்ஸ் (காணொலி)
அரசியல் கைதிகளின் வழக்குகளை விசாரணை மேற்கொள்வதற்காக அமை க்கப்பட்ட விசேட நீதிமன்றத்தின் ஊடாக அரசியல் கைதிகளின் வழக்குகள் இழுத்தடிக்கப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறு ப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் குற்றம் சுமத்தியுள்ளார்.
விசேட நீதிமன்றத்தில் போதைப்பொ ருள் தொடர்பான வழக்குகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதாக தெரிவித்த அவர், அரசியல் கைதிக ளின் வழக்குகளை துரிதப்படுத்தி அவ ர்களை விடுதலை செய்ய வேண்டு மென தெரிவித்துள்ளார்.
2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான குழு நிலை விவா தத்தின் மூன்றாம் நாள் விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் தொடர்ந்த வண்ணமுள்ளது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்டத்தையும் நீக்க வேண்டுமென விவாதித்து வலியுறுத்தியுள்ளார்.