பிரபாகரனைப் பார்த்து வேதனை அடைந்தேன்
காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
குஜராத்தின் வதோதராவில் நேற்று தொழில் அதிபர்களுடன் கலந்துரையாடினார். அதில் பங்கேற்றவர்கள் ராகுல் காந்தியிடன் சில கேள்விகளை முன்வைத்தனர்.
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது, இதற்கு பதிலளித்த ராகுல், பிரபாகரனின் சடலத்தை பார்த்து நானும் எனது சகோதரி பிரியங்காவும் மிகவும் வேதனையடைந்தோம்.மற்றவர்களின் துயரங்களில் பங்குகொள்வதுதான் காந்தி குடும்பத்தின் பாரம்பரியம் என கூறியுள்ளார்.