பேராசிரியர் ஜெயராமன் மீதான தேசத் துரோக வழக்கை ரத்துச்செய்யுமாறு - சீமான்!
கதிராமங்கலம் கிராமத்தில் விவசாய நிலங்களை பாடுபடுத்திட முயலும் அர சுகளை எதிர்த்த பேராசிரியர் ஜெயராமன் மீது போடப்பட்டுள்ள தேசத்துரோக வழக்கினை ரத்துச்செய்யுமாறு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கி ணைப்பாளர் சீமான் எச்சரிக்கை.
போராட்டக்காரர்கள் மீதான அடக்கு முறைகளை அரசு நிறுத்திக் கொள்ள வேண்டுமெனவும் இது தொடர்பாக மேலும் அறிக்கையில் விவரிக்கப்ப ட்டுள்ளதாகவது -
"தமிழ்த்தேசிய இனத்தின் பெருமை மிகு ஆளுமையாகத் திகழ்கிற மண் ணுரிமைப்போராளி பேராசிரியர் த. ஜெயராமன் அவர்கள் எழுதிய, 'நதி நீர் இணைப்புத்திட்டம் - ஆறுகளைப் பிடுங்கிவிற்கும் இந்தியா' எனும் நூலுக்கா கத் தேசத்துரோக வழக்குத் தொடுக்கப்பட்டிருப்பது ஜனநாயக மாண்புகளு க்கும், நெறிகளுக்கும், கருத்துரிமைக்கும் முற்றிலும் எதிரானதாகும்.
பேராசிரியர் ஜெயராமன் அவர்கள் தனிமனிதரல்ல!
தமிழ்த்தேசிய இனத்தின் போர்க்குணமிக்கப் பேராளுமை ஆவார். அவர் மீதான தேசத்துரோக வழக்கு தொடுக்கப்பட்டிருப்பதை நாம் தமிழர் கட்சி வன்மையாக கண்டிக்கின்றோம்.
அவர் மீது புனையப்பட்டிருக்கும் தேசத்துரோக வழக்கு உள்ளிட்ட பொய்யான வழக்குகள் யாவற்றையும் உடனடியாகத் மீளப் பெற வேண்டுமென வலியுறு த்தப்பட்டுள்ளது.