Breaking News

தமிழீழ பெண்கள் எழுச்சி நாள் நினைவில் - 2ம் லெப்.மாலதி

தமிழ் பராம்பரியத்தில் பெண்கள் என்றால் எப்படி இருக்க வேண்டும் எப்படி வாழ வேண்டுமென  சமூகத்தி ல் வேரூன்றியிருந்த, பெண்ணான வள் இப்படித்தான் இருப்பாள். இதற்கு மேல் அவளால் இயலாது. ஆணை விட பெண்ணுக்கு ஆற்றல் குறைவு என்ற கருத்துக்களை தமிழீழ விடு தலை பெண்போராளிகள் நிரூபித்துக் காட்டியுள்ளனர். 

பெண்புலிகள் போராட அத்தியாயம் தொடங்கிய நாள் இன்றாகும். 1984ஆம் ஆண்டு முதல் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினூடாக பெண்கள் ஆயு தப் போராட்டத்திற்குள் தம்மை இணைத்தனர்.

1990களின் பிற்பகுதியில் தனித்துவமாக செயற்படும் வகையில் பெண்கள் படையணி புலிகளால் கட்டியெழுப்பப்பட்டது. பெண்போராளிகள் புலிகளின் அனைத்து விதமான கட்டமைப்புக்குள்ளும்  வளர்க்கப்பட்டனர். 


அந்த வகையில், மாலதி படையணி, சோதியா படையணி போன்றவற்றைக் குறிப்பிடலாம். இவர்கள் தமிழீழ போராட்ட வரலாற்றில் இருந்து பிரிக்க முடியாத சக்தியாக பெண்போராளிகள் வளர்ந்துள்ளனர். 

1987 ஒக்டோபர் 10, இந்திய அமைதிப் படைகளுடன் விடுதலைப் புலிகள் மோதலை தொடங்கிய நாள் அன்று கோப்பாயில் இந்திய படைகளுடனான பெற்ற நேரடி மோதலில் வீரச்சாவை 2ஆம் லெப்.மாலதி மலர்மாலையானாள்.

இவரின் நினைவு நாளில், தமிழீழ பெண்கள் எழுச்சி நாள் நினைவு கூரப்பெற்று  பெண்களாலும் செய்ய முடியாததென்று எதுவுமில்லையென்றதை எடுத்துக் காட்டியவன் 2ஆம் லெப் மாலதி.


தமிழ்ப் பெண்களுக்கு அநீதி இளைத்த, வல்லாதிக்க இந்திய இராணுவத்தை எதிர்கொள்வதற்காக 10.10.1987 அன்றைய தினம் நடுராத்திரியில் கோப்பாய் கிறேசர் வீதியில் காத்திருந்த 2ஆம் லெப்.மாலதி 1987 ஒக்டோபர் 10 ஆம் திகதி நள்ளிரவு 1 மணியளவில் இந்திய வல்லாதிக்க இராணுவம் மீது அவளது எம்-16 ரக துப்பாக்கியிலிருந்த குண்டுகள் சீறி எழுந்தன. குண்டுகள் தீப்பிளம்பாகின. 

 அத் தாக்குதலே 2ஆம் லெப். மாலதியின் இறுதித் தாக்குதலாகும்.

இவரின் நினைவு நாளே தமிழீழ பெண்கள் எழுச்சி நாள் நினைவு கூறப்பட்டு வருகிறது.