Breaking News

ஐ.ரோ பாராளுமன்ற உறுப்பினர் தலைமையிலான குழு இலங்கை நோக்கி விஜயம் இன்று !

ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் வனஜின் லெம்பட் தலைமையிலான குறித்த குழுவில் ரிச்சட் கோபட், உல்ரிகோ முலர் மற்றும் வஜிட் கான் ஆகி யோர் அடங்கிய குழுவொன்று இன்று இலங்கைக்கு விஜயமாகின்றது.
ஐரோப்பா வழங்கும் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகைக்கு ஏற்ப இலங்கையில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் அத ன் முன்னேற்றங்கள் மற்றும் நல்லி ணக்கம் தொடர்பில் ஆராயும் முகமா கவே இக் குழு இலங்கை பயணமாகி யுள்ளது.

எதிர்வரும் நவம்பர் 3 ஆம் திகதி வரை இவர்கள் இலங்கையில் இருப்பார்கள் எனவும் நாளைய தினம் வட மாகாணத்திற்கும் விஜயமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அவுஸ்திரேலியாவின் பிரதமர் மெல்கம் டேர்ன்புல் எதிர்வரும் 2ம் திகதி இலங்கை விஜயமாக இருப்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.