கட்டார் விஜய நிறைவுடன் ஜனாதிபதி நாடு திரும்பினார்
கட்டாருக்கான விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை நாடு திரும்பியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கட்டார் அமீர் தமீன் பின் அஹமட் அல் தானி ஆகியோரு க்கிடையிலான சந்திப்பு நேற்று நடை பெற்றுள்ளது.
கட்டார் எமீர் திவான் மாளிகைக்கு விஜயம் செய்த ஜனா திபதிக்கு இராணுவ அணிவகுப்பு மரி யாதையுடன் மகத்தான வரவேற்பளி க்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகி ன்றது. அரச தலைவர்களுக்கு இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை ஆர ம்பமாகின.
ஸ்ரீலங்கன் விமான சேவையுடன் பங்காளராகுவதற்கு ஜனாதிபதி யினால் விடுக்கப்பட்ட வேண்டு கோள் தொடர்பில் கட்டார் ஆட்சியாளரால் விஷேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இலங்கையின் துறைமுகங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவி ருத்திக்கு உதவி வழங்க கட்டார் இணக்கம் தெரிவித்துள்ளது.
புதுப்பிக்கத்தக்க சக்தி மற்றும் வாயு மின்னுற்பத்தி துறையில் காணப்படும் முதலீட்டு சந்தர்ப்பங்கள் தொடர்பாக இதன்போது ஜனாதிபதி விளக்கமளித்த துடன், இலங்கையில் இயற்கை வாயு மின்நிலையம் அமைப்பதற்கு முதலீடு செய்யவும் கட்டார் ஆட்சியாளர் இணக்கம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள், மின்சக்தி, நீர் முகாமைத்துவம், சுகாதாரம் மற்றும் நிதி துறைகளில் காணப்ப டும் தொடர்புகளை மேம்படுத்தத்தக்க 07 புதிய உடன்படிக்கைகள் கைச்சாத்திட ப்பட்டுள்ளது.