புதிய அரசமைப்பு ஒற்றையாட்சிக்கு அச்சுறுத்தலாம் - விமல் வீரவன்ச
புதிய அரசமைப்பு ஒற்றையாட்சிக்கு அச்சுறுத்தலாக உள்ளதுடன், நாட்டை இரண்டாகப் பிரிப்பதற்கு பாதையாக லாமென அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவிடம் நேற்று நேரில் நிரூபித்த விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி.
புதியதொரு அரசமைப்பு உருவாவதற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள அரசியல் கட்சிகளையும், அமைப்புக்களையும் தனித்தனியே சந்தித்துக் கலந்துரையாடி அவற்றை வழி க்குக் கொண்டு வருவதற்கு அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தனித்தே செயற்படத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனுடனான முதல் சந்திப்பு தேசிய சுதந்திர முன்னணியுடன் நேற்று இடம்பெற்றுள்ளது.
‘‘புதிய அரசமைப்பில் ஒருங்கியை பட்டியல் (ஒரே விடயத்தில் மத்திக்கும் மாகாணங்களுக்கும் அதிகாரங்கள் வழங்கப்படும் பகுதி) நீக்கப்பட்டு மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிரும் முயற்சி முன்னெடு க்கப்படவுள்ளது.
அதற்கேற்ற வகையிலே இடைக்கால அறிக்கை உருவாகியுள்ளது. ஒற்றையாட்சிக்கும், பௌத்த மதத்துக்குள்ள முன்னுரிமையையும் இடைக்கால அறிக்கை சவாலாகியுள்ளது.
இதனை ஏற்க முடியாமைக்கு புதிய அரசமைப்பு அவசியமில்லை’’ என்று அரச தலைவரிடம் கருத்துரைத்ததாக விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.
இதற்கு அரச தலைவர் வழங்கிய பதில் தொடர்பில், விமல் வீரவன்ச எதுவும் குறிப்பிடவில்லையென.