ஊடகங்கள் மக்களை தவறாக வழிநடத்துவதாக பிரதமர் ரணில் குற்றச்சாட்டு !
ஊடகங்கள் மக்களை தவறாக வழிநடத்துவதாக ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

புதிய அரசமைப்புக்கான வழிநடத்தும் குழுவின் இடைக்கால அறிக்கையை அஸ்கிரிய, மல்வத்து ஆகிய பீடங்களின் மஹாநாயக்க தேரர்களிடம் அரசு கையளித்திருந்தது. மேற்படி அறிக்கை தொ டர்பில் ஆராய்ந்து வந்த இவ்விரு பீடங்களும், அது சம்பந்தமாக இறுதி முடி வொன்றை எடுப்பதற்காக நேற்று மாலை தலதாமாளிகையில் சந்தித்தன.
சங்க சபைக் கலந்துரையாடலுக்காக சட்டத்தரணிகளும், பேராசிரியர்களு ம் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. சுமார் இரண்டரை மணிநேரத்துக்கும் மேல் நடைபெற்ற கூட்டத்தில், வழி நடத்தும் குழுவின் இடைக்கால அறிக்கை சம்ப ந்தமாக விரிவாக ஆராய ப்பட்டுள்ளது.
இக் கூட்டம் முடிவடைந்தப் பின்னர் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட மல்வத்து பீடத்தின் அனுநாயக்க தேரர், 'தற்போதுள்ள அரசமைப்பே போது மானதாக உள்ளதாகவும் அதற்கு அப்பால் ஒன்றும் அவசியமில்லை என தெரிவித்தார்.
மேலும் ராமாண்ய, அமரபுர ஆகிய பீடங்களின் மஹா நாயக்க தேரர்களிடமும் எடுத்துரைக்கப்பட்டு, மஹாநாயக்க தேரர்களின் முழு எதிர்ப்பும் ஒரு மித்து வெளியிடுவதாக தெரிவித்துள்ளார்.
எனினும் மல்வத்து மற்றும் அஸ்கிரி பீட மகா நாயக்க தேரர்கள் இக் கலந்துரையாடலில் கலந்து கொள்ளவில்லையெனக் குறிப்பிட்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஊடகங்கள் மக்களை தவறாக வழிநடத்துவதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
மக்கள் தவறாக வழி நடத்தப்படுகின்றார்கள் என நீங்கள் குற்றம் சுமத்து கின்றீர்கள் யார் மக்களை தவறாக வழிநடத்துவது. இன்று அனைத்து பத்தி ரிகைகள் மற்றும் ஊடகங்களிலும் மல்வத்து மகாநாயக்க தேரரின் நிழற்ப டத்தை பிரசுரித்து, செய்திகளை வெளியிட்டிருந்தனர்.
எனினும் மல்வத்து மகாநாயக்க தேரர் நாட்டில் இல்லை. இன்று நான் அவரு டன் கதைத்தேன். அவ்வாறாயின் எப்படி அந்த நிழற்படம் வரமுடியும். எனக்கு ஒருமுறை கேட்டுச் சொல்ல முடியுமா?
இது தவறாக வழிநடத்தும் ஒன்றுதானே? மல்வத்துபீட மகாநாயக்கர் புதிய அரசியலமைப்பு தொடர்பான தனது நிலைப்பாட்டை ஏற்கனவே தெரிவித்து ள்ளார்.
மேலும் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படவில்லை.ஜனாதிபதி கூறியதை நம்புவதாக தெரிவித்துள்ளார். அனைத்து பத்திரிகைகளில் முதல் பக்கத்தை பார்த்த போது என்ன இருக்கின்றது என நினைத்துக்கொண்டு, மகாநாயக்க தேரரை தொடர்புகொண்டுவினவினேன்.
தியவடன நிலமே கலந்துகொண்டார் என்றால் அவரின் நிழற்படத்தை பிரசு ரித்திருக்க வேண்டும். தவறாக வழிநடத்த வேண்டாம் என்றே நான் கூறு கின்றேன்.
மகாநாயக்க தேரர் ஆதரவாகவோ எதிராகவோ எதாவது கருத்தைக் கூறுவரா யின் அதனை வெளியிடுங்கள். அவர் நாட்டில் இல்லாத தருணத்தில் ஏன் கூறுகின்றீர்கள்?
ஏன் ஊடகங்கள் பொய்யான தகவல்களை வெளியிடுகின்றன என்று கேள்வி எழுப்ப வேண்டியுள்ளது.
ஊடகங்களை சந்தித்து நான் இதனைக் கேட்கி ன்றேன். நீங்கள் என்ன கூறுகின்றீர்கள்?
ஒருவரால் கூட பதில் கூற முடியவில்லை தானே?
ஊடகங்களை வைத்துக்கொண்டு இதனை நான் கூறுகின்றேன்.இவ்வாறு எழுதினால் என்ன நடக்கும்.?
நான் தற்போது கூறுவதை முதல் பக்கத்திலா இறுதிப் பக்கத்திலா பிரசுரிப்பீ ர்கள்.
நானும் பதில் கூற வேண்டுமே?
அஸ்கிரி மல்வத்து பீட மகாநாயக்க தேரர்கள் இல்லாமல் என்ன இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன?
மகாநாயக்க தேரர் இல்லாத நிலையில் அவர் தலைப்புச் செய்தியாக வருவார் ஆயின் தலைப்புச் செய்திக்கான இடத்தை இருக்கும் பிரதமருக்கு வழங்கலாம் தானே? என்ன இது விளையாட்டு?
மக்கள் ஆணையொன்றை வழங்கியுள்ளனர் அதனை செய்ய வேண்டாம் என்றா சொல்கின்றீர்கள்?
என்ற கேள்வியை தொடுத்துள்ளார்.