ஐ.நா அதிகாரிகள் முள்ளிவாய்க்கால் பிரதேசத்திற்கு விஜயம் !
ஐக்கிய நாடுகள் சபையின் இடை நிலை நீதி ரீதியான விசேட பிரதிநிதி பப்லோ டி கிரீஃப் தலைமையிலான ஐக்கிய நாடுகள் சபை குழுவினர் இன்று காலை இறுதி யுத்தம் நடை பெற்ற முல்லைத்தீவு முள்ளிவா ய்க்கால் பிரதேசத்திற்கு விஜயம் ஆகி யிருந்தனர்.
போரினால் மூட்டப்பட்ட அசம்பா விதங்கள், ஏற்றுமதி நடவடிக்கைகள் மற்றும் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றங்களை ஆராய்வதற்காகவே ஐக்கிய நாடுகள் சபையின் இடை நிலை நீதி தொடர்பான விசேட பிரதிநிதி பப்லோடி கிரீஃப் இலங்கைக்கு விஜ யம் ஆகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாகவே நேற்று திருகோணமலைக்கு விஜயம் ஆகியிருந்த குறித்த ஐ.நா. குழுவினர் இன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் போரால் பாதி க்கப்பட்ட பல பகுதிகளுக்கு விஜயம் மேற்கொள்ளும் பொருட்டு வருகை தந்து ள்ளனர்.
மேலும் முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் போரில் உயிரிழந்தவர்களு க்காக நினைவு கற்கள் அமைக்கபட்ட சின்னப்பர் தேவாலயத்தில் உள்ள போ ரில் படுகொலையானவர்களின் நினைவு தூபியை கண்ணுற்றதோடு போரின் எச்சங்களாக எஞ்சியுள்ள அடையாளச் சின்னங்களையும் மேற்பார்வை செய்து ள்ளனர்.
இவ்வேளை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சிலரும் முறை ப்பாடுகளை குறித்த குழுவினரிடம் விடுத்துள்ளனர். கடந்த மே 18 அன்று குறித்த சின்னப்பர் தேவாலயத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொட ர்பில் நினைவு கற்கள் அமைக்கப்பட்டு நடைபெறவிருந்த நிகழ்வு,
நீதிமன்ற உத்தரவுக்கமைய தடை விதிக்கப்பட்டதோடு அதற்கான ஒழுங்கு களை மேற்கொண்ட அருட்தந்தை எழில்ராஜன் விசாரணைக்காக பொலிஸா ரால் அழைக்கப்பட்டமையையும் தெரிவித்திருந்தனர்.