அரசியல் கைதிகளின் நீதிக்காக யாழ். பல்கலைக்கழகத்தை முடக்கிப் போராட்டம்!
அனுராதபுர சிறைச்சாலையில் உண்ணாவிர தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசி யல் கைதிகளின் கோரிக்கைகளை உடனடி யாக நிறைவேற்றக் கோரியும், அவர்களின் விடுதலையை வலியுறுத்தியும் யாழ். பல்க லைக்கழகத்தை முற்றாக முடக்கும் போரா ட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரிய ர்கள், கல்விசாரா பணியாளர்கள் என, பல் கலைக்கழக சமூகத்தினர் இணைந்து நேற்றுக் காலை ஆரம்பித்த இந்தப் போராட்டத்தினால், பல்கலைக்கழகச் செயற்பாடுகள் முற்றாக முடங்கின. பல்கலைக்கழக வாயில்கள் அனைத்தையும், மூடி தொடங்க ப்பட்டுள்ள இப் போராட்டம், காலவரையறையின்றித் தொடருமென தெரிவி க்கப்பட்டுள்ளது.
1. அனுராதபுர சிறைச்சாலையில் உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடு பட்டுள்ள மூன்று அரசியல் கைதிக ளின் வழக்குகளையும் மீளவும் வவு னியா நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும்.
2. அரசியல் கைதிகளையும் தனியான சிறைக் கூடங்களில் வைக்க வேண்டும்.
3.சிறையிலுள்ள அரசியல் கைதிகளின் வழக்குகளை உடனடியாக விசார ணைக்கு எடுக்க வேண்டும்.
4. ஏற்கனவே பல ஆண்டுகளாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசி யல் கைதிகளை எவ்வித நிபந்தனைகளுமின்றி விடுதலை செய்ய வேண்டும்.
5. புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகளு க்குச் சிறந்த வாழ்வாதார உதவிகளை ஏற்படுத்த வேண்டும்.
இவ் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்தே இக் காலவரையற்ற போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இப் போராட்டத்துக்கு, யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்கள், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்கள், பல்கலைக்கழக பணி யாளர் சங்கத்தினர் ஆதரவு நல்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.