ஓமந்தையில் விபத்து பேரூந்துடன் பால் பவுசர் - 24பேர் காயம்!
இன்று காலை ஓமந்தை ஆடைத் தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேரூந்து பால் பவுசருடன் மோதுண்ட விபத்தில் 24 ஊழியர்கள் காய மடைந்துள்ளனர்.
வவுனியா இராசேந்திரகுளம் பகுதியி லுள்ள ஆடைத் தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றி வந்த பேரூந்து ஓமந்தை பன்றிக்கெய்த குளம் பகுதி யில் பயணிக்கையில் எதிர் திசையில் முல்லைத்தீவு நோக்கிச் சென்று கொ ண்டிருந்த பால் பவுசருடன் மோதி விபத்தில் சிக்கியுள்ளது.
இவ்விபத்தில் 24பேர் காயமடைந்ததுடன் விபத்துத் தொடர்பாக ஓமந்தை காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த விப த்தில் காயமடைந்தவர்கள் அனைவரும் வவுனியா பொது மருத்துவமனை யில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.