Breaking News

கட்டார் பிர­த­ம­ருடன் ஜனா­தி­பதி மைத்­திரி சந்­திப்பிலானவை...

இரண்டு நாள் உத்­தி­யோ­க­பூர்வ விஜ யம் மேற்­கொண்டு கட்டார் சென்­று ள்ள ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நேற்று கட்டார் பிர­தமர் அப்­துல்லாஹ் பின் நசர் கலீபா அல்­தா­னியை சந்­தித்துப் பேச்­சு­வார்த்தை நட த்­தி­யுள்ளார். இச் சந்­திப்புத் தொட ர்பில் ஜனா­தி­பதி செய­லகம் நேற்று விடுத்­துள்ள அறிக்­கையில், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் கட்டார் விஜயம் தமது நாட்­டுக்கு பெரும் கௌரவ­ம் எனத் தெரிவித்துள்ளனர்.


இரண்டு நாடு­க­ளுக்கும் இடை­யி­லான ஒத்­து­ழைப்பு மேலும் பலப்­ப­டுத்த உதவும் என கட்டார் பிர­தமர் தெரி­வித்­துள்ளார். இரு நாடு­க­ளுக்­கி­டை­யி­லான உற­வு­களை எதிர்­கா­லத்தில் பல­மாக முன்­னெ­டுப்­பது குறித்து இரு தலை­வர்­களும் விரி­வாக கலந்­து­ரை­யா­டினர். மின்­சாரம், சக்­தி­வளத்துறையில் உள்ள முத­லீட்டு சந்­தர்ப்­பங்கள் குறி த்து ஜனா­தி­பதி கட்டார் பிர­த­ம­ருக்கு எடுத்­துக்­கூ­றி­யுள்ளார். சர்­வ­தேச மட்­டத்­திலும் அந்­நாட்டில் பல்­வேறு துறை­களில் தொழில் ­பு­ரியும் இலங்­கை­யர்­க­ளு க்கு வழங்கும் ஒத்­து­ழைப்­பு­க­ளுக்கு கட்டார் பிர­த­ம­ருக்கு ஜனா­தி­பதி நன்றி தெரி­வித்துள்ளார். 

 மேலும் இவ்­வி­ஜ­யத்­தின்­போது கைச்­சாத்­தி­டப்­பட்ட புதிய புரிந்­து­ணர்வு ஒப்­பந்­த­மா­னது இரு நாடு­க­ளுக்கும் இடை­யி­லான பொரு­ளா­தார, வர்த்­தக மற்றும் தொழில்­நுட்­பத்­துறை ஒத்­து­ழைப்­புக்­களை மேலும் பலப்­ப­டுத்த உதவும். 

நவீன தொழில்­நுட்­பத்­துடன் இன்று முழு உல­கமும் இணைந்­துள்ள நிலையில் உலகின் அனைத்து நாடு­க­ளுக்கும் இடையில் ஒத்­து­ழைப்பை அதி­க­ரிப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி இவ்வேளை வலி யுறுத்தியுள்ளார். 

அத்துடன் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறும் கட்டார் பிரதமருக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.