இடைக்கால அறிக்கையில் விவாதமானால் நாடாளுமன்றம் போர்க்களமாம்– மஹிந்த அணி
புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கைமீது விவாதம் நடைபெறுமானால் நாடாளுமன்றம் போர்க்களமாகுமென மகிந்த அணி அறிக்கை.
மகிந்த அணியின் நாடாளுமன்ற உறு ப்பினரும், ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவருமான வாசுதேவ நாணயக்கார கொழும்பில் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பிலேயே மேற்படி எச்சரித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்..
புதிய அரசமைப்பைக் கொண்டுவருவதற்குப் பதிலாகத் தற்போதைய அரசமைப்பை மறுசீரமைக்கலாம். புதிய அரசமைப்பை உருவாக்கும் நடவடிக்கையால் அதிகளவிலான நிதியை அரசு வீணடித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் மூன்று நாள்கள் நிதியை வீணடிக்கும் செயற்பாட்டில் அரசு இறங்கியுள்ளது. நாங்கள் விவாதத்துக்குச் செல்வோம். ஆனால், அங்கு இடம்பெறும் ஜன நாயக விரோதச் செயற்பாடுகளால் நாடாளுமன்றம் போர்க்களமாகும். அதிலிருந்து நாடாளுமன்றைப் பாதுகாத்து காக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.