தீங்கிழைக்கும் அரசியலமைப்பினை அங்கீகரித்து கையொப்பமிடேன்
சபாநாயகர் கரு ஜயசூரிய உறுதி
பௌத்த மதத்தின் முதன்மை ஸ்தானத்தி ற்கோ அல்லது நாட்டிற்கோ தீங்கிழைக்கும் எந்தவொரு அரசியல மைப்பு யோசனைக் கும் நான் கையொப்பமிட மாட்டேன் என மாநாயக்கர்கள் உள்ளிட்ட அனைத்து மதத்தலைவர்களுக்கும் உறுதியளிக்கின்றேன் என்று சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
மீரிகம பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் கல ந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மைய நாட்களில் புதிய அரசியலமைப்பு தொடர்பாக அதிகமாக பேசப்படுகின்றது. பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. அவை அனைத்தும் மக்களை குழப்புவதாக அமைந்திருக்கின்றன. புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதற்கான அரசியலமைப்பு பேரவையொன்று அமைக்கப்பட்டுள்ளது.
அதன் தலைவராக சபாநாயகர் என்ற அடிப்படையில் நான் இருக்கின்றேன்.
இதுவரையில் புதிய அரசியலமைப்பு ஒன்று உருவாக்கப்படவில்லை. அரசியலமைப்பு பேரவையின் தலைவர் என்ற அடிப்படையில் கூட அவ்வாறான ஒன்றை நான் கண்ணால் காணக்கூடவில்லை.
புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கின்றபோது அது குறித்து அனைத்து தரப்பினரிடத்திலும் கருத்துக்கள் பெறப்படவேண்டியது அவசியமாகின்றது.
அந்த அடிப்படையில் நாம் அனைவரிடத்திலும் தமது யோசனைகளை முன்வைக்குமாறு கோரினோம்.
இதில் நாட்டை பிளவு படுத்தும் யோசனை வந்திருக்கலாம். நாட்டில் ஒரு பகுதியை கோரும் யோசனை முன்வைக்கப்பட்டிருக்கலாம். அதற்காக அவற்றை எல்லாம் அங்கீகரிப்பது என்று பொருள்படாது.
தற்பொது இடைக்கால அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பாக அரசியலமைப்பு பேரவையில் கலந்துரையாடல்கள் நடைபெற்று பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது. இதன்போது பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 225 பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களும் உள்வாங்கப்படும்.
ஒரு சில உறுப்பினர்கள் அரசியலமைப்பு பேரவையில் இருந்து நீங்கியிருந்தாலும் ஏனையவர்களின் கருத்துக்களை நாம் உள்வாங்குவோம். அதன் பின்னர் இறுதி செய்யப்பட்டு அரசியலமைப்பு பேரவையின் தலைவர் என்ற வகையில் நான் கையொப்பமிட வேண்டும்.
அவ்வாறு கையொப்பமிடும் பட்சத்திலேயே அது சட்டமாகுவதற்கான அங்கீகாரத்தினை பெறமுடியும்.
ஆகவே மகாநாயக்கர்கள், மற்றும் சமயத்தலைவர்கள் உள்ளிட்ட எந்தவொரு தரப்பினரும் அச்சமடையவேண்டியதில்லை.
நான் அரசியலமைப்பு பேரவையின் தலைவர் என்ற வகையிலும் சபாநாயகர் என்ற அடிப்படையிலும் பௌத்த சமயத்தின் முதன்மைத் தானத்திற்கோ அல்லது நாட்டிற்கோ தீங்கு விளைவிக்கின்ற எந்தவொரு விடயமும் அரசிய லமைப்பு யோசனையில் காணப்பட்டால் நிச்சயமாக எனது பதவிக்காலத்தி னுள் கையொப்பமிடப்போவதில்லை என்பதை உறுதிபடத் தெரிவித்துக்கொ ள்கின்றேன்.
ஆகவே தற்போது வரையில் வரையப்படாத ஒரு அரசியலமைப்பினை மையப்படுத்தி பரப்பப்பட்டு வரும் கருத்துக்களை மையப்படுத்தி வீணாக குழப்பமடையவேண்டிய அவசியமில்லை என்றார்.