‘இலங்கையில் பாப்பரசர் பிரான்சிஸ் 2015
பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் தனது இலங்கை விஜயத்தின் நிகழ்வுகளைக் காண்பிக்கும் படவிளக்கப் புத்தகத்தை முகமலர்ச்சியுடன் பார்வையிடுகின்றார்.
‘இலங்கையில் பாப்பரசர் பிரான்சிஸ் 2015’ என்ற மகுடத்தில் கொழும்பு பேரா யர் அதிவணக்கத்துக்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் ஆதரவுடனும் வழிகாட்டலுடனும் எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் (சிலோன்) (பிறைவேட்) லிமிட்டெட்டினால் தொகு த்து பிரசுரிக்கப்பட்ட இந்தப் புத்தகம் நினைவை விட்டகலாத பாப்பரசரின் விஜயத்தையும் இலங்கையில் கத்தோலிக்க திருச்சபையின் வரலாறு பற்றிய நிகழ்வுகளையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. இத்தாலியின் தலைநகர் ரோமில் வத்திக்கான் நகரில் பரிசுத்த தந்தையிடம் எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் முகாமைத்துவப் பணிப்பாளர் குமார் நடேசன் அவர்கள் கடந்த 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை புத்தகத்தின் பிரதியைக் கையளித்தார்.
இலங்கை விஜயத்தின் நிகழ்ச்சிகளை ஒழுங்கமைத்த குழுவின் உறுப்பினர்கள் உட்பட தூதுக் குழுவினரை வத்திக்கான் நகரில் அமைந்துள்ள அப்போஸ்தலிக்க மாளிகையின் மறை ஆலோசனை மண்டபத்தில் பரிசுத்த பாப்பரசர் வரவேற்றார். இலங்கை பல வருடகால போரின் விளைவான அவலங்களிலிருந்து விடுபட்டு நல்லிணக்கத்தை நாடுவதற்கு பாடுபட்டுக்கொண்டிரு க்கின்ற ஒரு நேரத்தில், தான் மேற்கொண்ட அந்த விஜயத்தை ‘பிரத்தியே கமான பேறு’ என்று பாப்பரசர் வர்ணித்தார்.