Breaking News

ஜனாதிபதி மைத்திரியின் சந்திப்பில் திருப்தியில்லை

கோரிக்கை நிறைவேறும்வரை வகுப்பு புறக்கணிப்பு; யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவிப்பு 

அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணா விரதத்தில் ஈடுபட்டு வரும் மூன்று தமிழ் அரசியல் கைதிகளி னதும் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்ற கோரி க்கை உட்பட ஐந்து கோரிக்கைகளை முன் வைத்து ஜனாதிபதியுடன் நாம் மேற்கொண்ட சந்திப்பானது திருப்தி அளிக்கவில்லை. இதனால் நாம் ஏமா ற்றமடைந்துள்ளோம் என்று யாழ்.பல்கைலகழக மாணவர் ஒன்றியம் அறி வித்துள்ளது. இந்த அரசியல் கைதிகள் விவகாரத்தில் ஜனாதிபதி உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் ஒன்றியம் சுட்டிக்காட்டியது. 

அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள மூன்று தமிழ் அரசியல் கைதிகள் தமது வழக்குகளை முன்பிருந்தது போன்று வவுனியா மேல் நீதிமன்றுக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி தொடர்ச்சியான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். 

இவ்வாறன நிலையில் அந்த அரசியல் கைதிகளது கோரிககைகளை உடனடி யாக நிறைவேற்றக்கோரி யாழ்.பல்கைலகழக மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை மேற்கொண்டிருந்தார்கள். 

அதனை தொடர்ந்து இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதியுடன் கலந்துரையாடு வதற்காக வடமாகாண ஆளுநர் ஊடாக திகதி பெற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. 

அதன்பிரகாரம் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி, பதில் சட்டமா அதிபர், சட்ட ஒழுங்கு அமைச்சர் உள்ளிட்ட குழு வினரை சந்தித்து மாணவர்கள் கலந்துரையாடியிருந்தனர். 

இக் கலந்துரையாடல் தொடர்பாகவும், அது தொடர்பிலான தமது நிலைப்பா டுகள் குறித்தும் தெளிவுபடுத்தும் ஊடகவுயலாளர் சந்திப்பு நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்.பல்கலைகழகத்தின் மாணவர் ஒன்றிய கூடத்தில் நடத்தப்பட்டது. இதன்போதே யாழ்.பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தினர் மேற்கண்டவாறு அறிவித்தனர். 

 ஊடகவியலாளர் சந்திப்பில்

யாழ்.பல்கலைகழக அனைத்துபீட மாணவர் ஒன்றிய தலைவர் கிருஸ்ன மேனன், கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் அனுராஜ் மற்றும் சட்டபீட மாணவன் தனன்ஜயன் ஆகியோர் கலந்துகொண்டு கருத்துக்களை தெரிவித்தி ருந்தனர். 

இதன்படி அவர்கள் மேலும் தெரிவித்திருப்பதாவது, ஜனாபதியிடம் முன்வை க்கப்பட்ட கோரிக்கைகள் இச் சந்திப்பில் பல்கலைகழக மாணவர்கள் சார்பில் பிரதானமாக ஜந்து கோரிக்கைகளை நாம் முன்வைத்திருந்தோம்.

அதாவது 

  • அநுராதபுரத்திற்கு மாற்றப்பட்ட அரசியல் கைதிகளின் வழக்குகள் மீள வும் வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு அல்லது யாழ்.மேல் நீதிமன்றுக்கு மாற்ற ப்பட வேண்டும். 
  • அரசியல் கைதிகளை, பாலியல் குற்றவாளிகள், மரண தண்டனை குற்ற வாளிகள் ஆகிய குற்றவாளிகளுடன ஒன்றாக தடுத்து வைத்திருக்க கூடாது. 
  • அனைத்து அரசியல் கைதிகளையும் நிபந்தனையின்றி ஜனாதிபதி தனது நிறைவேற்று அதிகாரத்தினூடாக விடுதலை செய்ய வேண்டும்.
  •  பயங்கரவாத தடைச் சட்டமானது நீக்கப்பட வேண்டும். 
  • பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சுலக்ஷன் கஜன் ஆகியோரது குடு ம்பத்திற்கு நஷ்டஈடு வழங்கப்பட வேண்டியதுடன் அவர்களது கொலை க்கு நீதி பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும்.

ஆகிய ஜந்து கோரிக்கைகளை நாம் ஜனாதிபதியிடம் முன்வைத்திருந்தோம்.  

மழுப்பலான பதிலளித்த ஜனாதிபதி நாம் முன்வைத்த கோரிக்கைகள் தொட ர்பாக ஜனாதிபதி தீர்க்கமான பதிலொன்றை வழங்கியிருக்கவில்லை. 

குறிப்பாக நாம் கோரிய கோரிக்கைகளுக்கு எம்மை திருப்திபடுத்துவதற்காக மலுப்பலான பதில்களையே வழங்கியிருந்தார். வழக்கு நடவடிக்கைகளை நீதி மன்றுக்கு மாற்றுவது தொடர்பாக நீதியமைச்சரே முடிவெடுக்க முடியும். 

அது தொடர்பில் தன்னால் எதுவிதமான முடிவினையும் எடுக்க முடியாது என கூறியிருந்ததுடன் இது விடயத்தை நீதியமைச்சிடமே விட்டுவிடுவதாக கூறி யிருந்தார். 

ஜனாதிபதியிடம் கண்ணீர்விட்டழுத அரசியல் கைதியின் சகோதரி இச் சந்தி ப்பில் அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபடும் தமிழ் அரசியல் கைதி ஒருவரின் சகோதரியான எமது பல்கலைகழக மாணவி கிரு ஷாந்தி கலந்துகொண்டிருந்தார். 

இதன்போது அவர், ஜனாதிபதியிடம் அரசியல் கைதிகளிற்கு மன்னிப்பளிக்கா விட்டாலும் அவர்களது நியாயமான கோரிக்கைகளையாவது நிறைவேற்று ங்கள் எனவும் ஜனாதிபதியாக இல்லாவிட்டாலும் ஒரு தந்தையை போன்றா வது எமக்கு உதவி செய்யுங்கள் என கண்ணீர் விட்டு அழுது கேட்டிருந்தார்.

ஏமாற்றத்தில் முடிந்த சந்திப்பு இவ் அரசியல் கைதிகளது விடயம் சம்மந்தமாக நாம் ஜனாதிபதியுடன் மேற்கொண்ட சந்திப்பானது எமக்கு எந்தவிதத்திலும் திருப்தியளிப்பதாக அமையவில்லை. முற்றுமுழுதாக ஏமாற்றமாகவே அமை ந்துவிட்டது. 

நாட்டின் தலைவர் என்ற வகையில் அவரால் உடனடியாக செய்யக்கூடியதாக இருந்த நடவடிக்கையை கூட ஜனாதிபதி செய்யவில்லை. தற்போது நாட்டின் நீதியமைச்சர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் வெளிநாட்டில் இருப்பதால் அவர்கள் நாட்டிற்கு வந்ததுமே இப் பிரச்சனை தொடர்பாக கலந்துரையாடி முடிவொன்றை அறிவிக்க முடியும். 

அதற்காக எதிர்வரும் புதன்கிழமை வரை கால அவகாசம் தருமாறு ஜனாதிபதி எமக்கு தெரிவித்திருந்தார். எனினும் நாம் இல்லை இன்று (நேற்று முன்தி னமே) ஒரு தீர்வொன்று தரப்பட வேண்டும் என கூறி அன்று மாலை வரை அங்கே இருந்தோம். 

ஆனால் நாம் காத்திருந்தும் எந்தவிதமான பயனும் ஏற்படவில்லை. தொடரும் மாணவர் போராட்டம். இவ்வாறான நிலையில் ஜனாதிபதி எமக்கு உறுதி மொழிகளை வழங்கி அதனை நிறைவேற்றாது விட்ட அனுபவமொன்றை நாம் ஏற்கனவே பெற்றுவிட்டோம். 

அதாவது கடந்த வருடம் பல்கலைகழக மாணவர்கள் இருவர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட பின்னர் அது தொடர்பாக நாம் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியிருந்தோம். 

இதன்போது எமக்கு ஜனாதிபதி அளித்த உறுதிமொழி எதனையும் நிறை வேற்றவில்லை.  

எனவே அந்த தவறினை நாம் இனியும் விடமாட்டோம். ஜனாதிபதி கோரிய கால அவகாசத்துக்குள் தான் கூறியது போன்று நாங்கள் ஏற்றுக்கொள்ளக்கூ டிய நியாயமான தீர்வொன்றை வழங்க வேண்டும் என வலியுறுத்தி அதற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் எதிர்வரும் புதன்கிழமை வரை நாம் அனை த்து பீட மாணவர்களும் வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளோம். 

மேலும் எதிர்வரும் திங்கட்கள் செவ்வாய்களில் கவனயீர்ப்பு போராட்டங்க ளையும் மேற்கொள்ளவுள்ளோம். அத்துடன் ஜனாபதி கோரிய கால அவகாச த்துக்குள் அவர் கூறியபடி செய்யாவிட்டால் எமது போராட்டமானது சமூக மயப்படுத்தப்பட்ட தொடர் போராட்டங்களாக வடிவமாறும். 

அக்கறை கொள்ளாத தமிழ் அரசியல் கட்சிகள். அரசியல் கைதிகள் விட யத்தில் தமிழ் அரசியல் தலைவர்கள் தமக்குள்ளேயே முட்டி மோதிக்கொள்கி ன்றார்களே தவிர இப் பிரச்சனையை தீர்ப்பதற்கு முன்னிக்கவில்லை. 

குறிப்பாக இந்த வருட தீபாவளி பண்டிகையை நாம் அரசியல் கைதிகளுக்காக கறுப்பு தீபாவளியாக அனுஸ்டித்து அவர்களுக்காக ஜனாதிபதியுடன் பேச்சு வார்த்தைக்கு சென்ற போது ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற தீபாவளி நிகழ்வில் தமிழ் அரசியல்வாதிகள் கலந்துகொண்டிருந்தார்கள். 

இதனை விட அரசியல் கைதிகள் விடயத்தை மையமாக கொண்டு தமது சுயலாப அரசியல் மோதல்களை மேற்கொண்டவருகின்றார்கள். எனவே இது நிறுத்தப்பட வேண்டும். தமிழ் அரசியல் தலமைகள் அரசயல் கைதிகளது பிரச்சனையை தீர்பதற்கு ஒன்றுபட வேண்டும். 

கிழக்கு பல்கலைகழகத்திலும் ஆதரவு போராட்டம். தமிழ் அரசியல் கைதி களின் உண்ணாவிரதத்திற்கு ஆதரவழித்து கிழக்கு பல்கலைகழக மாணவர் ஒன்றியமானது அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. 

அத்துடன் எதிர்வரும் திங்கட்கிழமை பாரிய போராட்டமொன்றை மேற்கொ ள்ளவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இவ்வாறான நிலையில் இப் போராட்ட த்தினூடா அரசியல் கைதிகள் விடயத்தில் வடக்கு கிழக்கு சமூகம் ஒற்றுமை யாகவே உள்ளது என்பதை அரசுக்கு தெரியப்படுத்தவே இப் போராட்டமானது முன்னெடுக்கப்படவுள்ளது. 

எனவே இற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். போராட்ட ங்க ளிற்கு ஆதரவளிக்க வேண்டும். நாம் நேற்றில் இருந்து முன்னெடுத்துள்ள வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்திற்கு யாழ்.பல்கலைகழகத்தின் அனைத்து சங்கங்களினதும் ஆதரவினை கேட்டிருக்கின்றோம். 

அத்துடன் பொது அமைப்புக்கள் சிவில் அமைப்புக்கள் என அனைத்து தரப்பி னரும் உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்க்கோரிய எமது போராட்டத்திற்கு ஆதரவழிக்க வேண்டும். என மாணவர் ஒன்றியத்தினர் தெரிவித்துள்ளனர்.ன அவர் தெரிவித்தார்.