யாழில் விபத்து - தூக்கி வீசப்பட்ட இளைஞன் படுகாயம் !
யாழ்ப்பாணம் நீர்வேலியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இன்று காலை கார் ஒன்றும் உந்துருளி ஒன்றும் நேரு க்கு நேர் மோதியமையினாலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
மேலும்,
யாழ்ப்பாணம்- பருத்தித்து றை வீதியில் கோப்பாயிலிருந்து பரு த்தித்துறை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த வைத்தியரின் காரும் எதிரே வந்துகொண்டிருந்த இளைஞ னின் உந்துருளியும் ஒன்றுடனொன்று மோதி விபத்துக்குள்ளானது.
உந்துருளியில் பயணித்த இளைஞன் சில மீற்றர் தூரம் வரை தூக்கி வீசப்பட்டுப் படுகாயமடைந்துள்ளார். பின்னர் அவரை வீதியில் பயணித்தவர்களால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசா லையில் சிகிச்சைகளுக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் மோதிக்கொண்ட வாகனங்களும் சேதமடைந்துள்ளதோடு இருவ ரினதும் கட்டு மீறிய வேகமே விபத்திற்கான காரணமாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் நடைபெற்று வெகு நேரமாகியும் பொலிஸார் குறித்த இடத்திற்கு பிரசன்னமாகவில்லையென பொது மக்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.