Breaking News

விடுதலைப் புலிகளின் ஆதிகால ஆயுதங்களை காட்சிப்படுத்துவதாக தகவல் !

தமிழ் நாடு கோவை மாவட்டத்தில் அமைக்கப்பட்டு வரும் அருங்காட்சி யகத்தில் தமிழீழ விடுதலைப் புலிக ளின் ஆயுதங்களும் காட்சிப்படுத்தப்ப டவுள்ளதாக  விமர்சனங்கள் தெரிவி க்கின்றன. 

தமிழ் நாடு பொலிஸாரின் சார்பா கவே மேற்படி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மேலும்  கோவையில் மிக வேகமாக அமைக்கப்பட்டு வரும் குறித்த அருங்காட்சியகத்தில், தமிழ் நாடு பொலிஸார் பல்வேறு காலகட்டங்களில் அணிந்த சீருடைகள் மற்றும் துப்பாக்கிகள் போன்ற ஆயுதங்கள் என்பன பார்வைக்காக காண்பிக்கப்படவுள்ளன. 

கோவை தொடருந்து நிலையத்துக்கு அருகில் அமைக்கப்பட்டுவரும் இந்த அருங்காட்சியகத்தில் தீயணைப்பு இயந்திரங்கள், நீர் மூழ்கிக் கப்பல்கள், பீரங்கிகள் போன்றவற்றுடன் இராணு வத்தில் பயன்படுத்தும் மிக் ரக போர் விமானமும் வைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலதிகமாக தமிழீழ விடுதலைப் புலிகள் பயன்படுத்திய ஆயுதங்களும் காண்பிக்கப்படவுள்ளதோடு சந்தனக் கடத்தல் வீரப்பன், மலையூர் மம்பட்டி யான் போன்ற போராளிகளின் துப்பா க்கிகள் போன்ற ஆயுதங்களையும் காண்பிக்க முடிவாகியுள்ளது. 

இதேவேளை தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்பகாலத்தில் பயன்படு த்திய ஆயுதங்கள் இக்கட்டான சூழ்நிலைகளின் மத்தியில் இந்தியாவிடம் கையளித்திருந்தமையும் நிரூபிக்கப்பட்டுள்ளது.