அதிகாரங்களைப் பகிர்ந்திட சிங்களவர்களின் நிலை என்ன? வடக்கு முதல்வர் பதில்!
“சிங்கள அரசியல், மதத் தலைவர்கள், தமிழர்களுடன் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ள சிறிதேனும் விருப்பமில்லை.
விருப்பம் இருந்திருந்தால், தாம் இது வரை தருவதாக உலக அரங்கில் கூறி யவற்றையேனும் தந்திருப்பார்கள்” என, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டு ள்ளார்.
“தாங்கள், சிங்கள அரசியல் மற்றும் மத ரீதியான தலைமைகளு டன் பலதையும் பேசி வருகின்றீர்கள்.
சில நேரங்களில் அவர்களைச் சின மூட்டும் வகையில் கருத்துக்ளை வெளியிட்டு வருகின்றீர்கள். இதனால் தர இருப்பதையும் சிங்கள அரசியல் தலைவர்கள் தராது விட்டு விடுவார்களோ என்ற ஒரு பயம், தமிழ் அரசியல் தலைமைகளிடம் தோன்றுகின்றது.
இது பற்றி உங்கள் கருத்து என்ன?”
எனக் கேள்வி எழுப்பப்பட்டபோது, இதற்கு பதிலளித்த அவர் மேலும் தெரிவிக்கையில்....
“இதற்கு, சிங்களத் தலைவர்கள், உங்களுக்குத் தர இருக்கின்றார்கள் என்று யார் உங்களுக்குச் சொன்னது?
அத்துடன் எமக்கு சட்டப்படி தரவேண்டிய உரித்துகளை எம்மிடம் இருந்து பறித்தெடுத்து வைத்துக் கொண்டு ‘அதைத் தருவோம், இதைத் தருவோம்’, ‘இன்னொன்றைத் தரமாட்டோம்’ என்று அவர்கள் பேரம் பேசுவதன் பின்னணி என்ன?
“ஒன்றை நாம் தெளிவாகப் புரிந்து வைத்திருக்க வேண்டும். அதனை, அண்மை யில் இங்கு வந்த ஐ.நா அலுவலர் பப்லோ டி கிறீப் அறிந்து வைத்திருக்கும் அளவுக்கு, எமது மக்கள் தலைவர்கள் அறிந்து வைக்க வில்லையே என்பது மனவருத்தத்தைத் தருகின்றது.
அதாவது, சிங்கள அரசியல், மதத் தலைவர்களுக்கு, தமிழர்களுடன் அதிகார ங்களைப் பகிர்ந்து கொள்ள எள்ளளவும் விருப்பமில்லை என்பதே அது. அது தான் எம்முடைய இன முரண்பாட்டுக்கான அடிப்படைக் காரணம்.
“சிங்கள அரசியல் தலைவர்கள், ஏதோ விதத்தில் ஆங்கிலேயரிடம் இருந்து பெற்றுக் கொண்ட அரசியல் அதிகாரத்தை, எந்த விதத்திலும் தாம் விட்டுக்கொ டுக்கக்கூடாது என்று எண்ணிக் கொண்டிருப்பது தான், எமது இன முரண்பா ட்டுக்குக் காரணம்.
பொய் பேசி, புருடா விட்டு, நைசாக ஐஸ் வைத்து பெற்றுக் கொண்ட அரசியல் அதிகாரத்தைப் பகிர்ந்து கொண்டால், சிங்கள இனமே அழிந்து போய்விடும் என்ற ஒரு பிரமை, சிங்கள அரசியல் தலைமைகளை ஆட்டிப்படைத்த வண்ண முள்ளது.
அதனால் அவர்கள், எப்படியும் முழு நாட்டினதும் அதிகாரத்தைத் தம் கைப்பி டிக்குள் வைத்திருக்கவே பார்ப்பார்கள்.
“சட்டப்படி கூடி வாழ்ந்து கொண்டி ருக்கும் ஒவ்வோர் இன, மத, மொழி அலகும், தம்மைத் தாமே ஆள்வதே சிறப்பு.
அவ்வாறு ஆண்டு கொண்டு, முழு நாட்டையும் ஒரே நாடாகக் கணித்துக் கொண்டு, அதற்குரிய ஆட்சியையும் நிலைநாட்டலாம். ஆனால் அதற்கு இட மளிக்க பெரும்பான்மையினருக்குப் பிரியமில்லை.
அவர்கள் கூறும் காரணம் என்னவென்றால், இந்த நாடு மட்டுமே தமக்குண்டு, தமிழர்களுக்குத் தமிழ் நாடு உண்டு என்பதாகும். ஆக மொத்தம் ‘தமிழர்களே வெளியேறுங்கள்.
இல்லையேல், எமக்கு அடிமைகளாக வாழுங்கள்’ என்பதே அவர்களின் அரசி யல் சித்தாந்தமாகத் தோன்றுகின்றது. ஆனால் அதனை வெளிவிடாமல் மிக நாகரிகமாக ‘அது தருவோம்’, ‘இது தருவோம்’ என்று எம்மை ஏமாற்றிக்கொ ண்டிருக்கின்றார்கள்.
இந் நிலையில், அவர்கள் எதைத் தரப்போகின்றார்கள் என்பதை நாம் சிந்தி த்துப் பார்க்க வேண்டும்.
“நாம் எமது உரிமைகளுக்காகப் போராட வேண்டும். அதற்காக, தமிழர்கள் ஒன்று திரள வேண்டும்.
அடுத்தது, எமது புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் எம்முடன் கூட்டுறவு வைத்துக் கொள்ள வேண்டும். மூன்றாவதாக, தென்னிந்திய தமிழ்ச் சகோதர சகோத ரிகள், எம்முடன் உறவுடன் இருக்க வேண்டும்.
அடுத்ததாக, இதுவரை காலமும் சரித்திரத்தை பிறழ்வாக மாற்றிக்கூறி வந்த பெரும்பான்மையினத்தவரின் பொய்மை அம்பலப்படுத்தப்பட வேண்டும். சர்வ தேச நெருக்குதல்கள் கூர்மையிடைய வேண்டும்.
சர்வதேச சட்டத்தின் கீழ் எமக்கிருக்கும் உரித்துகளைப் பெற நாம் முயற்சிகள் எடுக்க வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் அடிப்படையாக நாம், எமது அக ந்தையையும் ஆணவத்தையும் மூட்டை கட்டி வைத்து விட்டு, தமிழ் இனத்து க்காகக் கூட்டுச் சேர்ந்து உழைக்க முன்வர வேண்டும்” என்றார்.