இலங்கையில் வானூர்தி தயாரிப்புச் செயற்பாடாம் விமானப்படை!
இலங்கையில் முதல் தடவையாக வான் படையினர் வானூர்தி தயாரிப்புப் பணியில் ஈடுபடவுள்ளதாக விமானப்படைத் தளபதி எயார் மார்சல் கபில ஜயம்பதி தெரிவித்துள்ளார்.
கண்டித் தலதா மாளிகையில் நடைபெற்ற மத வழிபாடுகளில் கலந்து கொண்டபோதே இவ்வாறு தெரிவி த்துள்ளார். மேலும் வான் படையினூடாக வானூர்திகளை நிர்வகிக்கும் செயற்பாடுகளே நடைபெற்று வருகி ன்றன.
பாதுகாப்புச் செயலரின் ஆலோசனைக்கு அமைவாக வானூர்திகளை இங்கு தயாரிப்பதற்குத் தேவையான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது டன் தேவையான இடம், சூழல், உற்பத்திப் பொறிகள் நிறைவடைந்த பின்னர் அடுத்த ஆண்டு முதல் வானூர்திகள் உற்பத்தி நடவடிக்கைகள் மேற்கொ ள்ளப்படுமெனத் தெரிவித்துள்ளார்.
போர்க் காலத்தில் போர் காரணமாக வானூர்திகள் சேதமடைந்தாலும் தற்பொழுது பறவைகளினால் சேதம் ஏற்படுகிறது.
எமது நாட்டிற்குரிய பன்னாட்டுக் கடற்பரப்பைப் பாதுகாப்பதற்கும், நாட்டிற்குள் சட்ட விரோதமாகப் பொருள்கள் எடுத்து வரப்படுவதைத் தடுக்கவும் கடற்படையுடன் இணைந்து கண்காணிப்பு மற்றும் சிறப்புப் பாதுகாப்பு முன்னெடுப்புகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்.
எமது நாட்டில் வானூர்திகளை உற்பத்தி செய்யும் அதேவேளை, நாட்டிற்கு உகந்த தொழில்நுட்பத்துடன் கூடிய வானூர்திகளை இறக்குமதி செய்வதற்கும் வான்படை திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்..