இன்று ஆரம்பம் - அரசியல் கைதிகளின் விடுதலை கோரி கையெழுத்துப் போராட்டம்
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இணை ந்து மாபெரும் கையெழுத்து போராட்டம் ஒன்றை இன்றைய தினம் ஆரம்பிக்கவுள்ளதாக யாழ்.பல்கலைக்கழக கலை ப்பீட மற்றும் அனைத்து பீட மாணவர் ஒன்றியங்கள் அறிவித்துள்ளன.
இப் போராட்டம் தொடர்பாக அவர்கள் அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் அரசியல் கைதிகள் விடுதலையை வலியுறுத்தி வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து மாபெரும் கையெழுத்து வேட்டை போராட்டத்தை மேற்கொள்ள தீர்மானம் செய்துள்ளோம்.
இப் போராட்டத்தில் நாம் அரசியல் கைதிகள் தொடர்பாக பல்வேறு கோரி க்கைகளை முன்வைத்தே இப் போரா ட்டத்தை ஆரம்பித்துள்ளோம்.
இதன்படி அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் அரசியல் கைதிகளின் வழக்குகள் அனுராதபுர நீதிமன்றத்திலிருந்து உடனடியாக வவுனியா நீதிமன்றத்திற்கு அல்லது யாழ்ப்பாண நீதிமன்றத்திற்கு மாற்றப்படல் வேண்டும்.
உடனடியாக அனைத்து அரசியல் கைதிகளையும் பாரிய குற்றச்செயல்களுடன் (கொலை, களவு, கற்பழிப்பு, கடத்தல்) தொடர்புடைய குற்றவாளிகளுடன் தடுத்து வைப்பதை நிறுத்தி அவர்களிலிருந்து வேறுபடுத்தி பாதுகாப்பான சிறைகளில் தங்குவதற்கு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் ஆகிய விடயங்களை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
அதேபோன்று சிறையில் அனைத்து தமிழ் அரசியல் கைதிகளினதும் வழக்குகள் உடனடியாக விசாரணைக்கு கொண்டு வரப்பட வேண்டும்.
ஏற்கனவே இக் கைதிகள் பல வருடகாலமாக கிட்டத்தட்ட 10 –- 15 வருடங்களுக்கு மேலாக சிறைத் தண்டனையையும், சிறைக்குள் பல சித்திரவதைகளையும் தண்டனையாக அனுபவித்தமை காரணமாக எந்தவித நிபந்தனைகளுமின்றி துரித கதியில் “நிபந்தனைகளுமின்றி அற்ற விடுதலை” செய்யப்பட்டு சமூகத்துடன் இணைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் வடக்கு,கிழக்கு மாகாணங்களில் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு சிறந்த வாழ்வாதாரம் மற்றும் தொழில்வாய்ப்பு என்பவற்றில் அதிக கூடுதலான கவனம் செலுத்தப்பட வேண்டும்.
அத்துடன் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட போராளிகளில் அங்கவீனராக இனங்காணப்பட்டவர்களுக்கு மிக விசேடமான தொழில்வாய்ப்பு மற்று ம் வாழ்வாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் ஆகிய விடயங்களை அரசாங்கம் துரித கதியில் மேற்கொள்ள வேண்டும்.
இக் கோரிக்கைகளை முன்நிறுத்தியே நாம் இன்றைய தினம் இக் கையெழுத்து போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளோம்.
இன்றிலிருந்து இப் போராட்டமானது வடக்கு, கிழக்கு முழுவதும் தொடர்ச்சி யாக இடம் பெறவுள்ளது.
இதில் வடக்கில் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கிழக்கில் கிழக்கு பல்கலைக்கழக கலை, கலாசார மாணவர் ஒன்றியமும் விபுலானந்தா அழகி யற் கற்கை நிறுவக மாணவர் ஒன்றியமும் இணைந்து முன்னெடுக்கும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.