Breaking News

இடைக்கால அறிக்கைக்கு எதிராக கூட்டு எதிரணி ஆர்ப்பாட்டம்

எதிர்­வரும் 30 ஆம் திகதி பாரா­ளு­மன்­றத்தில் விவா­தத்­துக்கு எடுத்­துக்­கொ ள்­ளப்­ப­ட­வுள்ள புதிய அர­சி­ய­ல­மைப்பு த் தொடர்­பான இடைக்­கால அறிக்­கை க்கு எதிர்ப்புத் தெரி­விக்கும் வகையில் பாரிய ஆர்ப்­பாட்­ட­மொன்­றினை முன்­னெ­டுக்­க­வுள்­ள­தாக கூட்டு எதி­ர­ணி­யி னர் தெரி­வித்­துள்­ளனர்.  நாட்டை பிள­வு­ப­டுத்தும் வகை­யி­லான அம்­சங்­களை உள்­ள­டக்­கிய புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பான இடைக்­கால அறிக்­கைக்கு எதிர்ப்புத் தெரி­விக்கும் பல்­வேறு அமைப்­பு­களை சேர்ந்­த­வர்­களும், பொது­மக்­களும் இந்த எதிர்ப்பு ஆர்ப்­பாட்­ட த்தில் கலந்­து­கொள்­ள­வுள்­ள­தா­கவும் அவர்கள் தெரி­வித்­துள்­ளனர். 

இந்த ஆர்ப்­பாட்­டத்­துக்­கான சகல ஏற்­பா­டு­களும் தற்­போது முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­வ­தா­கவும், அத­ன­டிப்­ப­டையில் எதிர்­வரும் 30 ஆம் திகதி காலை 9 மணிக்கு பாரா­ளு­மன்ற சுற்­று­வட்­டத்­துக்கு முன்னால் இவ்­வெ­திர்ப்பு ஆர்ப்­பாட்டம் ஆர ம்­ப­மாகும் எனவும் குறிப்­பிட்­டுள்­ளனர். 

பல்­வேறு விமர்­ச­னங்­க­ளுக்கும் ,சர்ச்­சை­க­ளுக்கும் உள்­ளாக்­கப்­பட்­டுள்ள புதிய அர­சி­ய­ல­மைப்புத் தொடர்­பான இடைக்­கால அறிக்கை மீதான விவாதம் எதிர்­வரும் 30 ஆம் திகதி பாராளுமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளதுடன் தொடர்ந்து மூன்று நாட்கள் விவாதம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.