வித்தியா வழக்கில், குற்றவாளிகளின் விசாரணையாளர்களுக்கு பணப்பரிசில்கள் !
புங்குடுதீவு மாணவி வித்தியா படு கொலை வழக்கில் குற்றவாளிகளைக் கண்டுபிடித்த விசாரணையாளருக்கு சிறப்புப் பணப்பரிசில்கள் நேற்று வழ ங்கப்பட்டுள்ளன. சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்ணாயக்கா இவ ற்றை நேற்று வழங்கப்பட்டுள்ளது.
யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டுப்பாலியல் வல்லுறவுக்கு உட்ப டுத்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கின் இறுதி தீர்ப்பு கடந்த செப்டெம்பர் மாதம் 27ம் திகதி வெளியாகியது.
இந்த கொலை வழக்கில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டுள்ள சுவிஸ்குமார் உள்ளிட்ட ஏழு பேருக்கு மரண தண்ட னை விதிக்கப்பட்டதுடன், இருவர் விடுதலையாகியுள்ளனர்.
மேலும் ஏழு பேருக்கும் 30 வருட கடூழிய சிறை த் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், வித்தியா படுகொலை வழக்கில், குற்றப்புலனா ய்வுப் பிரிவின் அப்போதய பணிப்பாளராகவி ருந்த சுதத் நாக முல்ல, விசாரணைணகளை நெறிப்படுத்திய உதவிப் பொலிஸ் அத்தியட்ச கர் பீ.ஏ திசார மற்றும் பிரதான விசாரணை அதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா, பொலிஸ் பரிசோதகர் இளங்க சிங்க உள்ளிட்ட 33 பொலிஸ் அதிகாரிகளுக்கு 13லட்சத்து, 12 ஆயிரத்து, 500ரூபாய் பணப்பரிசில் பகிர்ந்தளி க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கி ன்றன.