இராணுவத்திலிருந்து தப்பியவர்களில் ஆறாயிரத்து 631 பேர் கைதாகியதாக தகவல் !
இராணுவத் தரப்பிலிருந்து தப்பித்து க்கொள்வதற்காக தப்பி ஓடியவர்கள், சரணடையாத மற்றும் சட்ட ரீதியாக விலகிடாத இராணுவத்தினர் இது வரையில் 6 ஆயிரத்து 631 பேர் வன்மையாக கைது செய்யப்பட்டு ள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற வர்களை சட்ட ரீதியில் விலக்கிடும் பொருட்டு கடந்த வருடம் (2016) டிசெம்பர் மாதம் பொது மன்னிப்புக் காலம் விதிக்கப்பட்டிருந்தது. இக் காலப்பகுதியில் குறிப்பிட்ட சிலரே சட்ட ரீதியா விலகினர். இவ் வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து நடத்திய சுற்றிவளைப்பில் 6 ஆயிரத்து 631 கைதாகியுள்ளதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.