Breaking News

உணவுத்தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள 3 அரசியல் கைதிகளின் நிலைமைகள் குறித்து கலந்துரையாடல்


தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் அனுராதபும் சிறையில் உணவுத்தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள 3 அரசியல் கைதிகளின் நிலைமைகள் குறித்து, நேற்றைய அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

குறிப்பாக உணவுத்தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள 3 அரசியல் கைதிகளது கோரிக்கை நியாயமானது என்று சுட்டிக்காட்டிய அமைச்சர் மனோகணேசன், இந்த விடயத்தில் அரசாங்கம் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டதாக எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

அதேநேரம் அரசாங்கத்துக்கு உள் இருந்து தாங்கள் அழுத்தம் கொடுக்கும் அதேநேரம், அரசாங்கத்தக்கு வெளியில் இருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு அழுத்தம் கொடுப்பதன் ஊடாகவே பல்வேறு பிரச்சினைகளை தீர்க்க முடியும் என்றும் மனோகணேசன் சுட்டிக்காட்டினார்