Breaking News

நிலைமாறுகால நீதி செயற்பாடு அரசியல் மயப்படுத்தப்படக்கூடாது

ஐக்­கிய நாடு­களின் விசேட நிபுணர் பப்லோ டி கிரீப் தெரி­விப்பு 

பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி வழங்­கு­வ­தற்­கான நிலை­மா­று­கால நீதி செயற்­பா­டுகள் அர­சியல் மயப்­ப­டுத்­தப்­ப­டக்­கூ­டாது. இந்த விட­யத்தில் அர­சியல் முன்­ னெ­டுக்­கப்­ப­டு­மானால் நிலை­மாறு கால நீதி செயற்­பா­டுகள் தோற்­க­டிக்­கப்­பட்­டு­விடும். இது நீதி செயற்­பா­டு­க­ளாகும். மாறாக அர­சியல் திட்டம் அல்ல என்­ப­தனை எப்­போதும் உணர்ந்­து­கொள்­ள வேண்டும் என்று இலங்­கைக்கு விஜயம் செய்­துள்ள உண்மை, நீதி, நட்­ட­ஈடு மற்றும் மோதல் மீள் நிக­ழாமை தொடர்­பான ஐக்­கிய நாடு­களின் விசேட நிபுணர் பப்லோ டி கீரீப் தெரி­வித்தார். 

நிலை­மா­று­கால நீதி செயற்­பா­டு­க­ளா­னது நீதி­யாக இடம்­பெ­ற­வேண்டும். அத்­துடன் வெளிப்­படைத் தன்மை மற்றும் பொறுப்­பு­டை­மைத்­தன்மை இதில் மிக முக்­கி­ய­மா­ன­தாகும். 

அது­மட்­டு­மன்றி நிலை­மாறு கால நீதி செயற்­பாட்டை முன்­னெ­டுக்­கும்­போது ஏனைய சர்­வ­தேச நாடு­களின் உத­வி­களைப் பெற்­றுக்­கொள்­வதில் தவ­றில்லை எனவும் ஐக்­கிய நாடு­களின் விசேட நிபுணர் சுட்­டிக்­காட்­டினார். 

யுத்­தத்­திற்குப் பின்­ன­ரான சமூ­கத்தில் நிலை­மா­று­கால நீதி செயற்­பா­டு­களை முன்­னெ­டுப்­பது பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு மட்­டுமே முக்­கி­ய­மா­ன­தெனக் கரு­தக்­கூ­டாது. மாறாக இந்த விடயம் முழு சமூ­கத்­திற்கும் முக்­கி­யத்­துவம் மிக்­கது என்­பதை கருத்தில் கொள்­ளே­வண்­டி­யது அவ­சியம் எனவும் ஐ.நா.வின் விசேட நிபுணர் பப்லோ டி கிரீப் குறிப்­பிட்டார். 

இலங்­கையின் பொறுப்­புக்­கூறல் நீதி செயற்­பா­டு­களை மதிப்­பீடு செய்­வ­தற்கு வருகை தந்­துள்ள உண்மை, நீதி, நட்­ட­ஈடு மற்றும் மோதல் மீள் நிக­ழாமை தொடர்­பான ஐக்­கி­ய­நா­டு­களின் விசேட நிபுணர் பப்லோ டி கீரீப் நேற்று சர்­வ­தேச கற்­கை­க­ளுக்­கான லக்ஷ்மன் கதிர்­காமர் நிலை­யத்தில் நேற்று வௌ்ளிக்­கி­ழமை நடத்­திய விசேட விரி­வு­ரை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறினார். 

அமைச்­சர்கள், இரா­ஜ­தந்­தி­ரிகள், சிவில் சமூகப் பிர­தி­நி­திகள், முப்­ப­டை­களின் உயர் அதி­கா­ரிகள் அர­சாங்க அதி­கா­ரிகள், வெளி­வி­வ­கார அமைச்சின் செய­லாளர், மற்றும் உயர் அதி­கா­ரிகள், உள்­ளிட்ட பல்­வேறு தரப்­பினர் இந்த விசேட சொற்­பொ­ழிவு நிகழ்வில் கலந்­து­கொண்­டனர். 

 ஐ.நா. வின் விசேட நிபுணர் உண்மை, நீதி, நட்­ட­ஈடு மற்றும் மோதல் மீள் நிக­ழாமை தொடர்­பான ஐக்­கி­ய­நா­டு­களின் விசேட நிபுணர் பப்லோ டி கீரீப் மேலும் அங்கு உரை­யாற்­று­கையில்: 

 நீண்­ட­காலம் மோதல் நடை­பெற்ற நாட்டில் நிலை­மா­று­கால நீதியை எவ்­வாறு முன்­னெ­டுப்­பது, எவ்­வாறு மீண்டும் இயல்பு நிலையைக் கொண்­டு­வ­ரு­வது என்­பது தொடர்­பாக ஆராய்­வ­தற்­கான ஒரு பொறுப்­பையே நான் வகிக்­கின்றேன். மோதலின் பின்­ன­ரான ஒரு­நாட்டின் நிலை­மா­று­கால நீதி செயற்­பா­டுகள் என்­பது மிகவும் முக்­கி­ய­மா­ன­வை­யாகும். 

அதில் அங்கம் பெறு­கின்ற உண்மை, நீதி, நட்­ட­ஈடு மற்றும் மீள் நிக­ழாமை ஆகிய நான்கு கார­ணிகள் யுத்­தத்­திற்குப் பின்­ன­ரான ஒரு நாட்டின் சமூ­கத்­திற்கு முக்­கி­ய­மா­ன­தாக காணப்­ப­டு­கின்­றன. 

இந்த நான்கு விட­யங்­களும் ஒன்­றுக்­கொண்டு தொடர்­பு­ப­டு­வ­தா­கவும் ஒன்­றுக்­கொன்று ஒத்­து­ழைப்பு வழங்­கு­வ­தா­கவும் அமைந்­தி­ருக்­கின்­றன. நிலை­மா­று­கால நீதி செயற்­பா­டுகள் என்ற விட­யத்தை நாங்கள் எடுத்து நோக்கும் போது அதற்­கென்று ஒரு ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட வடிவம் கிடை­யாது. 

அந்­தந்த நாடுகள் தமது சூழ­லுக்கு ஏற்ப யுத்­தத்­திற்குப் பின்­ன­ரான சமூ­கத்தின் நிலை­மா­று­கால நீதி செயற்­பா­டு­களை வடி­வ­மைத்­துக்­கொள்ள முடியும். இதன் உள்­ளார்ந்­தத்தைப் புரிந்­து­கொள்­ள­வேண்­டி­யது மிக முக்­கி­ய­மாகும். 

பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்வை நோக்கி பய­ணிக்­க­வேண்­டுமே தவிர தீர்வை உரு­வாக்­கி­விட்டு அதனை நாடி செல்­லக்­கூ­டாது. மனித உரிமை மீறல்கள் இடம்­பெற்­றுள்­ள­னவா என்­பது குறித்து ஆரா­ய­வேண்டும் என்­ப­துடன் மீறல்கள் தொடர்ந்து இடம்­பெ­றா­ததை உறு­திப்­ப­டுத்­த­வேண்­டி­யதும் அவ­சி­ய­மாகும். உண்­மையைக் கண்­ட­றியும் செயற்­பாட்டில் உலகில் எந்­த­வொரு நாடும் முற்­று­மு­ழு­தான வெற்­றியைப் பெற­வில்லை. 

ஆனால் ஒரு குறிப்­பிட்­ட­ளவில் உண்­மை­களை கண்­டு­பி­டிக்க முடி­யு­மான நிலை ஏற்­பட்­டது. இங்கு பாதிக்­கப்­பட்டோர் தொடர்பில் ஆரா­யப்­ப­ட­வேண்டும். பாதிக்­கப்­பட்ட மக்கள் கவ­லை­யுடன் இருக்­கின்­றனர். 

எனவே முதலில் இங்கு நிலை­மாறு கால நீதியை முன்­னெ­டுப்­ப­தற்கு ஒரு எதிர்­பார்ப்பு இருக்­க­வேண்டும். இதற்­காக நாங்கள் முன்­னோக்கிப் பய­ணிக்­க­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். நிலை­மா­று­கால நீதி செயற்­பா­டு­களை பொறுத்­த­வ­ரையில் அந்த செயற்­பாடு நீதி­யா­ன­தாக இடம்­பெ­ற­வேண்டும். 

அதி­லி­ருக்­கின்ற பண்­பு­களில் நாம் நம்­பிக்கை கொள்­ள­வேண்டும். இங்கு நிலை­மாறு கால நீதி செயற்­பா­டு­களை முன்­னெ­டுப்­பதில் பல்­வேறு வரை­ய­றை­களும் காணப்­ப­டு­கின்­றன. 

ஆனால் இதனை நடை­மு­றைப்­ப­டுத்­து­வதில் ஒத்­து­ழைப்­பு­களைப் பெற்­றுக்­கொள்­ள­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும் இதில் சமூக நம்­பிக்கை என்­பது மிகவும் முக்­கி­யத்­துவம் மிக்­க­தா­க­கா­ணப்­ப­டு­கின்­றது. 

மாறாக தனி­மை­யுடன் இந்த விட­யத்தை சாதிக்க முடி­யாது. இங்கு நிறு­வன ரீதி­யான பங்­க­ளிப்­புக்கள் மிகவும் முக்­கி­ய­மா­ன­வை­யாக காணப்­ப­டு­கின்­றன. 

தவ­றான நோக்கில் மீறல்கள் இடம்­பெற்­றுள்­ள­னவா என்­பது குறித்து ஆராய்­வதும் இங்கு மிக முக்­கி­ய­மா­ன­தாகும். இந்த நிலை­மா­று­கால நீதி செயற்­பா­டு­களில் எவ்­வாறு நாங்கள் பிர­வே­சிக்­கின்றோம் என்­பதும் இங்கு முக்­கி­ய­மா­ன­தாக இருக்­கின்­றது. 

ஆனால் இந்த செயற்­பா­டு­களை ஒரு முறை­மை­யுடன் செய்­ய­வேண்­டி­யி­ருக்­கின்­றது. பல்­வேறு தரப்­புக்­களின் அனு­ப­வங்­களை எடுத்­துப்­பார்க்­கும்­போது முரண்­பா­டுகள் இருக்­கலாம். ஆனால் கருத்­தி­யலில் மாற்­றத்தைக் கொண்­டு­வ­ரு­வ­தற்­கான செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்­க­வேண்டும். 

நீதி செயற்­பா­டு­களின் பல்­வேறு விட­யங்­களை அமுல்­ப­டுத்­து­வதும் இங்கு மிக அவ­சி­ய­மா­ன­தாகும். முரண்­பா­டு­களை நீக்­கி­விட்டு செயற்­ப­டு­வதே இங்கு மிக உகந்­த­தா­க­வுள்­ளது. பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு உத­வ­வேண்டும். 

சட்­டத்தை மதித்து இந்த செயற்­பா­டு­களை அமுல்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும். இவை மோச­மான எதிர்­வி­ளை­வு­களை ஏற்­ப­டுத்­தாத வண்ணம் அமை­ய­வேண்­டி­யது அவ­சி­ய­மா­ன­தாகும். 

குறிப்­பாக நிலை­மா­று­கால நீதி செயற்­பா­டு­களில் வெளிப்­ப­டைத்­தன்­மையும் பொறுப்­பு­மிக்க தன்­மையும் மிகவும் அவ­சி­ய­மா­னது என்­பதை கவ­னத்தில் கொள்­ள­வேண்டும். சாத­க­மான முடி­வு­களை நோக்­கியே நாம் பய­ணிக்­க­வேண்டும். 

குறிப்­பாக சமூ­க­மட்­டத்தில் நம்­பிக்­கையை கட்­டி­யெ­ழுப்­பு­வது மிகவும் அவ­சி­ய­மாகும். நிலை­மா­று­கால நீதி செயற்­பாடு என்­பது ஒரு மாயா­ஜாலம் அல்ல என்­பதைப் புரிந்­து­கொள்­ள­வேண்டும். 

ஆனால் சமூ­கத்தில் காணப்­ப­டு­கின்ற நம்­பிக்­கையை மேலும் பலப்­ப­டுத்­து­வ­தற்­கான ஆற்றல் இதற்கு இருக்­கின்­றது என்­பதை புரிந்­து­கொள்­ள­வேண்டும். இது வெற்­றியை நோக்­கி­ய­தான நடை­மு­றை­யாகும். சட்­டத்தின் ஆட்­சிப்­ப­டுத்தல், சமூ­கங்­க­ளுக்­கி­டை­யி­லான நம்­பிக்­கையைப் பலப்­ப­டுத்தல் என்­பன இங்கு மிக முக்­கி­ய­மா­ன­வை­யாகும். 

பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கான கோணம் அவ­சி­ய­மா­ன­தாகும். இவை எல்­லா­வற்­றுக்கும் முக்­கி­ய­மா­ன­தாக நம்­பிக்கை கட்­டி­யெ­ழுப்­பப்­ப­ட­வேண்டும். சமூ­கங்­கங்­க­ளுக்­கி­டை­யி­லான நம்­பிக்­கையே நிலை­மா­று­கால நீதி செயற்­பா­டு­களில் மிக முக்­கிய விட­ய­மாக காணப்­ப­டு­கின்­றது. 

ஆனால் நிலை­மா­று­கால நீதி செயற்­பா­டுகள் அர­சி­யல்­ம­யப்­ப­டுத்­தப்­ப­டக்­கூ­டாது. அவ்­வாறு அர­சி­யல்­ம­யப்­ப­டுத்­தப்­பட்டால் அந்த செயற்­பாடு தோற்­க­டிக்­கப்­பட்­டு­விடும். இது நீதிப் பொறி­மு­றை­யாகும். அர­சியல் திட்டம் அல்ல என்­பனை எப்­போதும் உணர்ந்­து­கொள்­ள­வேண்டும். 

இங்கு நம்­பிக்கை என்­பது மிகவும் முக்­கி­ய­மா­னது என்­ப­துடன் நிலை­மா­று­கால நீதியை முன்­னெ­டுப்­ப­தற்­கான எதிர்­பார்ப்பு அவ­சி­ய­மா­ன­தாகும். 

கேள்வி 

நிலை­மா­று­கால நீதி விவ­காரம் ஏன் இந்­த­ளவு சர்­வ­தே­ச­ம­ய­மா­கின்­றது? 

பதில் 

இந்த நிலை­மா­று­கால நீதி செயற்­பாட்டு விட­யத்தில் ஏனைய சர்­வ­தேச நாடு­களின் உத­வி­க­ளையும் அனு­ப­வங்­க­ளையும் பெற்­றுக்­கொள்­வதில் எவ்­வி­த­மான தவறும் இல்லை. 

அருகில் உள்ள நாடு­க­ளி­டமும் உத­வியைப் பெறலாம். அதே­போன்று பூகோள ரீதியில் மிகவும் தூர இருக்­கின்ற நாடு­க­ளி­டமும் கூட உத­வி­கைளப் பெறலாம். ஏனைய நாடு­களில் காணப்­பட்ட அனு­ப­வங்­களை பெறலாம். 

குறிப்­பாக தென்­னா­பி­ரிக்­காவில் இடம்­பெற்ற உண்­மையை கண்­ட­றியும் பொறி­மு­றையில் பல்­வேறு உலக நாடுகள் அக்­கறை செலுத்­தின. அதா­வது தென்­னா­பி­ரிக்­கா­வி­லி­ருந்து மிக தூர இருக்கும் நாடுகள் கூட இவ்­வாறு அக்­கறை செலுத்­தின. 

இவ்­வாறு செயற்­ப­டு­வதன் மூலம் மிக விரை­வாக விட­யங்­களை அணுக முடி யும் என்­பது மிக முக்­கி­ய­மா­ன­தாகும். இந்த நீதி செயற்­பா­டு­களில் சிவில் சமூ­கத்தின் பங்­க­ளிப்பு மிக தீர்க்­க­மா­ன­தாகும். நிலை­மா­று­கால நீதி செயற்­பா­டுகள் பரந்­து­பட்ட விட­ய­மாகும். 

சர்­வ­தேச உத­வி­களைப் பெற முடியும் என்­றாலும் கூட இதற்­கான வடி­வத்தை நாடு­களே தயா­ரித்துக் கொள்­ளலாம். ஆனால் நிலை­மாறு கால நீதி செயற்­பாட்டின் அதி­க­ள­வான பணிகள் கள மட்­டத்­தி­லேயே இடம்­பெற வேண்டும் என்­பது மிக முக்­கி­ய­மா­ன­தாகும். 

 கேள்வி 

இலங்­கையில் யுத்­தத்தை வென்ற பெரும்­பான்மை சமூகம் இவ்­வாறு நீதிப்­பொ­றி­மு­றை­யொன்றை முன்­னெ­டுப்­பதை விரும்பவில்லை. அதேநேரம் பெரும்பான்மை மக்களின் சமூகத்தின் ஆதரவின்றி அரசாங்கத்தினால் பதவி யில் நீடிக்க முடியாது. எனவே இவ்வாறான செயற்பாடுகள் எந்த நாட்டில் வெற்றி பெற்றுள்ளன என்று கூற முடியுமா? 

 பதில் 

நான் இன்றைய தினம் (நேற்று) இலங்கை விவகாரம் தொடர்பில் பேசுவதற்கு எதிர்பார்க்கவில்லை. எனது மதீப்பீட்டை முடித்துக் கொண்டு இலங்கையிலி ருந்து திரும்புவதற்கு முன்பாக எதிர்வரும் திங்கட்கிழமை கொழும்பில் ஊடக வியலாளர்களை சந்தித்து எனது மதிப்பீடுகளை வெளியிடவிருக்கின்றேன். 

அதுவரை பொறுமை காக்குமாறு கூறுகின்றேன். ஆனால் இங்கு ஒரு முக்கி யமான விடயத்தை சுட்டிக்காட்ட வேண்டும். அதாவது நிலை மாறுகால நீதி செயற்பாடுகள் என்பன பாதிக்கப்பட்ட மக்களுக்கு மட்டும் நன்மை பயக்க க்கூடியது என கருத வேண்டாம். 

மாறாக அது முழு சமூகத்துக்கும் நன்மை பயக்கும் என்பதை மறந்து விடக்கூடாது. இந்த விடயத்தில் அரசியல் சம்பந்தப்படக்கூடாது. இது மிகவும் கவனமாகவும் சமநிலையுடனும் முன்னெடுக்கப்பட வேண்டிய விடயமாகும். கவனமாக ஆராய்ந்து முடிவுகளுக்கு வரவேண்டும். 

யுத்தத்திற்கு பின்னரான நாட்டில் இது முக்கியமானது. நிலைமைாறுகால நீதி தவிர்க்கப்படக்கூடாது என்றார்.