மைத்ரி – ரணில் அரசாங்கத்தை ஆட்சியிலிருந்து விரட்டியகற்ற - தினேஸ் குணவர்தன
ஸ்ரீலங்காவின் தற்போதைய மைத்தி ரி-ரணில் தலைமையிலான தேசிய அரசாங்கத்திற்கு ஆட்சியில் இருப்ப தற்கு எந்தவொரு அதிகாரமோ சட்ட அனுமதியோ இல்லையென மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணி குறிப்பிட்டுள்ளது.
மைத்திரி-ரணில் தலைமையிலான ஸ்ரீலங்காவின் தற்போதைய அரசா ங்கத்தி னால் தயாரிக்கப்பட்டுவரும் உத்தேச அரசியல் யாப்பினால் நாடு பிளவுபடும் ஆபத்து எழுந்துள்ளதாக குற்றம்சாட்டிவரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணியினர் நாட்டு மக்களை தெளிவுபடுத்தும் வகையில் பொதுக் கலந்துரையாடல்களை முன்னெடுத்து ள்ளனர்.
மக்களுக்கு வழங்கிய எந்தவொரு வாக்குறுதியையும் நிறைவேற்றாத தற்போ தைய அரசாங்கம் நாட்டை அரசியல் யாப்பைக் கொண்டு துண்டாடவும் முயற்சித்து வருவதாலேயே ஆட்சி செய்யும் அதிகாரத்தை இழந்திருப்பதாக மஹிந்த அணியின் முக்கியஸ்தரான நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன கண்டியில் இடம்பெற்ற பொதுக் கலந்துரையாடலில் நிரூபி த்துள்ளார்.
நாட்டை பிளவுபடுத்த முய லும் தற்போதைய மைத்ரி – ரணில் அரசாங்கத்தை ஆட்சியிலிருந்து விரட்டுவ தற்கு யாவரும் ஒன்றிணை ந்து செயற்பட முன்வர வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளார்.
“யுனிடரி“ என்ற ஆங்கில வார்த்தையே “ஏக்கிய“ என்ற சிங்கள வார்த்தைக்கு சட்ட ரீதியாகவும், சர்வதேச அரங்கிலும் அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ள ப்பட்ட ஆங்கில மொழி பெயர்ப்பாகும்.
இவ் வார்த்தைப் பிரயோகத்தை அகற்றுமாறு சம்பந்தன் தலைமையிலான தமிழர் தரப்பினர் விடுத்த கோரிக்கைக்கு ஐக்கிய தேசியக் கட்சியினர் ஆதரவு வெளியிட்டதாலேயே தற்போது முன்வைக்கப்பட்டுள்ள உத்தேச அரசியல் யாப்பு தொடர்பான இடைக்கால அறிக்கையின் பரிந்துரைகளில் முக்கிய இடத்தை வகித்துள்ளன.
ஆனால் கூட்டு எதிரணியினரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரும் அதே போல் ஜாதிக்க ஹெல உறுமய கட்சியினரும் யுனிடர் என்ற பதத்தை அகற்ற இணங்க முடியாதென கையெழுத்திட்டு எழுத்து மூலம் மனுவொன்றையும் சமர்ப்பித்திருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கமைய இந்த இரண்டு நிலைப்பாடுகள் தொடர்பிலேயே பாராளுமன்றில் விவாதம் நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால் இடைக்கால அறிக்கையில் ஏக்கிய என்ற ஒற்றையாட்சி பதம் நீக்கப்பட வேண்டுமென பரிந்துரைகள் குறி ப்பிடவில்லையென ஜனாதிபதியும் பிரதமரும் திட்டவட்டமாக அறிவித்து வருவதாலேயே இவ் விவகாரத்தை குறிப்பிட வேண்டிய நிலை உருவாகி யுள்ளது.
உத்தேச அரசியல் யாப்பு குறித்த இடைக்கால அறிக்கையில் ஏக்கிய என்ற பதத்திற்கு பிளவுபடுத்த முடியாத மற்றும் துண்டாட முடியாத நாடு என்ற விளக்கத்தை வழங்கலாமென்ற பரிந்துரை முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் தமிழில் ஒருமித்த நாடு என அழைக்கப்படுமென்றும் தெரிவிக்கப்ப ட்டுள்ளது.
அதுவம் பொய். சரி சிங்களவர்களான நாம் முன்வைக்கும் யோசனைகளை ஜனாதிபதியும் பிரதமரும் ஏற்றுக்கொள்ள விரும்பவில்லையென நாம் எடுத்து க்கொண்டாலும், வழிநடத்தல் குழுவில் அங்கம் வகிக்கும் டக்ளஸ் தேவாந்தா ஏக்கிய என்ற பதத்திற்கான தமிழ் மொழிபெயர்ப்பு ஒருமித்த நாடு என குறிப்பி டுவது முற்றிலும் தவறானதென எழுத்துமூலம் நிரூபித்துள்ளார்.
அதாவது 72 ஆம் ஆண்டு அரசியல் யாப்பிலுள்ள தமிழ் பதத்தை அல்ல இங்கு குறிப்பிட்டிருக்கின்றனர். 78ஆம் ஆண்டு அரசியல் யாப்பில் ஏக்கிய என்ற பதத்திற்கான தமிழ் பதத்தை அல்ல இடைக்கால அறிக்கையில் தெரிவித்து ள்ளனர்.
அதாவது இடைக்கால அறிக்கையில் இணைக்கப்பட்ட நாடு என்ற தெளிவை வழங்கக்கூடிய தமிழ் பதத்தையே அவர்கள் தெரிவிந்துள்ளனர்.
ஆங்கிலத்தில யுனிட்டரி என்ற பதத்திற்குப் பதிலாக அன்ட் டிவைடட் என்ற பதத்தை முன்மொழிந்துள்ளனர். சிங்களத்தில் ஏக்கிய என்ற பதத்திற்கு மேலதி கமாக பிளவுபடாத என்ற பதத்தை இணைக்க பரிந்துரைத்துள்ளனர்.
பிளவுபடாத நாட்டிற்கு எதற்காக அவ்வாறான வார்த்தைப் பிரயோகம். எமது நாட்டுக்கு அவ்வாறான பதங்கள் தேவையில்லை.
அதாவது இதுவரை காலமும் நடைமுறையில் இருந்த இருக்கும் அரசியல் யாப்புக்களில் மிகத் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ள ஆட்சி முறைமையான ஏக்கிய என்ற ஒற்றையாட்சி முறைமை தொடர்ந்தும் பாதுகாக்கப்பட வேண்டு ம்.
அதன் ஊடாகவே நாட்டின் பாராளுமன்றத்திற்குரிய கௌரவமும் அதிகாரமும் தங்கியுள்ளது. அதில் மாற்றங்களை ஏற்படுத்த இடமளிக்க முடியாது.
ஆகவே பாராளுமன்றம் அதி உயர் பீடமாக கருதப்படுகின்றது.
அதனை விடுத்து அந்த கௌரவத்திற்கு பங்கம் ஏற்படுத்தி பாராளுமன்றின் சிரசை வெட்டி அகற்றும் வகையிலான பதங்களை உத்தேச அரசியல் யாப்பில் அறி முகப்படுத்துவதன் மூலம் நாடு துண்டாடப்படக்கூடிய ஆபத்து இருக்கின்றது.
இவ் ஆபத்திலிருந்து நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாப்பதற்கு நாம் அனைவரும் இணைந்து போராட வேண்டிய காலம் வந்துவிட்டதென தெரிவித்துள்ளார்.