பிரிந்திருந்து வாதங்களை தொடர்வதனால் பிரச்சினைக்கு தீர்வை எட்ட முடியாது !
பிரிந்திருந்து தனித்தனியாக வாதங்களை தொடர்வதன் பொருட்டு எந்த பிரச்சி னைக்கும் தீர்வு இல்லையென ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்ற நிகழ்வொன்றி ல் உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். முன்மொழியப்ப ட்டுள்ள புதிய அரசியலமைப்பு தொட ர்பாக காணப்படும் சில தவறான அபி ப்பிராயங்களை நீக்கும் பொருட்டு எதி ர்காலத்தில் 3 படிமுறைகளை நடைமுறைப்படுத்த இருப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். அரசியலமைப்பு திருத்தம் குறித்து கலந்துரையாடலை நடாத்துவதற்கு சர்வ மத தலைவர்கள் மாநாட்டை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்ததுடன், அரசியல்யாப்பு குறித்து ஆர்வமுள்ள கல்விமா ன்கள் மற்றும் புத்தி ஜீவிகள் கொண்ட மாநாட்டையும் முன்னெடுக்கவுள்ள தாகவும் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் அரசியலமைப்பு தொடர்பாக தற்போதுள்ள பிரச்சினைகள் அனை த்துக்கும் இதனூடாக தீர்வு கிடைக்குமென எதிர்பாப்பதாக ஜனாதிபதி மைத்தி ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.