மைத்திரி – மஹிந்த அரசியல் ரீதியாக ஒன்றிணைப்பதற்காக பிக்குகள் நியமனமாம் !
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வையும், முன்னாள் ஜனாதிபதி மஹி ந்த ராஜபக்சவையும் அரசியல் ரீதி யாக ஒன்றிணைப்பதற்காக ஏற்று க்கொள்ளப்பட்ட சங்கத் தலைமைப் பிக்குகள் மூவர் நியமிக்கப்படவுள்ள னர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள சிரேஷ்ட அமைச்சர்கள் சிலருடன் ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் நடத்திய பேச்சுவார்த்தை வெற்றியளித்திரு ப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. இதற்கமைய ஏற்றுக்கொள்ளப்பட்ட மூன்று தலைமைப் பிக்குகளை நியமித்து இவர்கள் இடையே சமரசக் கலந்துரையா டலை மேற்கொள்ளவுள்ளனர்.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவையும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் ஒரே மேடையில் கொண்டு வருவதற்காக இதற்கு முன்னர் ஒன்றிணைந்த எதி ர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தலைமையில் சில உறுப்பினர்கள் நியமனமாகியுள்ளனர்.
எனினும் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிவடைந்த நிலையி லேயே தற்போது தேரர்களின் உதவியும் இறுதி முயற்சி மேற்கொள்ளப்பட வுள்ளமை தெரிவிக்கத்தக்கதாகும்.