Breaking News

அரசாங்கத்திடம் வேலை பெற்றுத் தந்தால் அரசியல் தீர்வு பாதிக்குமாம் - சம்பந்தன்!

இளைஞர்களிற்கு வேலை பெற்று க்கொடுக்கும் விடயத்தில் நான் வேலை பெற்றுத்தர வேண்டுமெ ன்றால் நான் பத்து அமைச்சர்களைத் தொடர்புகொண்டு ஐம்பது பேருக்கு வேலை தாருங்கள் எனக் கேட்டால் தருவார்கள். அப்படி நான் வேலை வாங்கித் தந்தால் உங்களின் அரசியல் தீர்வு பாதிப்படைவதுடன், உங்களின் அதிகாரங்கள் குறையுமென  எதிர்க்க ட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.  இளைஞர்களுக்கு இரண்டு கிழமைக்குள் வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்த பின்னர் ஆறுமா தங்கள் கடந்தும் இன்னமும் வேலை வழங்கப்படவில்லை.

இது தொடர்பாக தெரிவிக்கையிலேயே மேற்குறிப்பிட்டவாறு  மேலும் தெரிவி க்கையில், ஜனாதிபதியிடம் 1000 பேருக்கு வேலை தாருங்கள் எனக் கேட்டால் தருவார். 

அதுவும் பெரிய வேலையில்லை. ஆனால் அதுவும் உங்களின் அரசியல் தீர்வைப் பாதிக்கும். அவருக்குச் சொல்ல வேண்டிய விடயங்களை நான் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறன். 

அதனை உங்களுக்குத் தெரியப்படுத்த முடியாது. அவர் சில விடயங்களில் சறுக்கி விடுவார் அதற்கு நான் விலை கொடுக்க முடியாதெனத் தெரிவித்து ள்ளார்.