Breaking News

7 இளைஞர்கள் மற்றும் மாமனிதர் சந்திரநேரு படுகொலை நினைவு கூரப்பட்டுள்ளது.

அம்பாறை திருக்கோவில் பிரதேச த்தில் 7 தமிழ் இளைஞர்கள் இராணு வத்தினரால் சுட்டு படுகொலையான சம்பவத்தின் 15 ஆம் ஆண்டு நினை வேந்தல் நிகழ்வுகள் நேற்றைய தினம் நடைபெற்றுள்ளதுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினர் மாமனிதர் அரியநா யகம் சந்திரநேருவின் 12 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும் உலக தமிழ் மாணவர் ஒன்றியத்தினரால் நினைவு கூரப்பட்டுள்ளது. இந் நினைவு தினங்கள் திருக்கோவில் மாணிக்கப்பிள்ளையார் ஆலயம் முன்பாக அமைந்துள்ள நினைவுத் தூபியில் நேற்று மாலை உணர்வு ரீதியாக நினை வுகூரப்பெற்றது. 

மாலை 5.00 மணியளவில் மாணிக்க ப்பிள்ளையார் ஆலயத்தில் மணியொ லிக்கப்பட்டு பிரதான சுடர்  ஏற்றப்ப ட்டதை தொடர்ந்து 7 இளைஞர்களின் சமாதிக்கு பெற்றோர்கள் மற்றும் உற வினர்களால் மலர்மாலை அணிவி த்து அஞ்சலிக்கப்பெற்றது.  

அத்துடன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநாயகம் சந்திரநேரு வின் சமாதிக்கு அவரது மனைவி மாலை சூடி அஞ்சலித்துள்ளார். 

நினைவேந்தல் நிகழ்வில் அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமை ப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், உலக தமிழ் மாணவர் ஒன்றியத்தின் ஆலோசகர் தம்பையா யோகேஸ்வரன் உலக தமிழ் மாணவர் ஒன்றியத்தின் மட்டு.அம்பாறை இணைப்பாளர் ஆர் ஆர்.டிஸ்கரன் முன்னாள் போராளிகள் எனப் பலர் கலந்து சிறப்பித்துள்ளனர்.

கடந்த 2002 ஆண்டு ஒக்டோபர் மாதம் 09ஆம் திகதி காஞ்சிரம்குடா இராணுவ முகாம் அமைந்திருந்த பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றின் போது இராணுவத்தினரால் துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டதில்  திருக்கோவில் பிரதேசத்தினை சேர்ந்த மாணவர்கள் உட்பட 7தமிழ் இளைஞர்கள் படுகொலை ஆகியுள்ளனர். 

 அதேவேளை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் அரியநாயகம் சந்திரநேரு கடந்த 2005 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 8 ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.