வடக்கில் இன்று ஆர்ப்பாட்டங்கள்
அநுராதபுரம் சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளால் முன்னெடுக்கப்பட்டுவரும் தொடர் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்றைய தினம் வடக்கில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படவுள்ளன.
அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பினர் இணைப்பாளர் அருட்தந்தை மா. சக்திவேல் இது தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.<