பாதாளக் குழுவுடன் தொடர்பாம் வடக்கு மாகாணசபை உறுப்பினர் மீது - குற்றச்சாட்டு
பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புகளைப் பேணி வரும் வடக்கு மாகாணசபை உறுப்பினர் உள்ளிட்ட இரண்டு அரசியல்வாதிகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
மேல் மாகாண உள்ளூராட்சி மன்றமொன்றின் முன்னாள் உறுப்பினர் மற்றும் வடக்கு மாகாணசபையின் உறுப்பினர் ஆகியோர் தொடர்பாகவே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்பு பேணுவதாகவும், நாட்டின் நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க முயற்சிப்பதாகவும் இவ் அரசியல்வாதிகள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவ்விரண்டு அரசியல்வாதிகள் தொடர்பிலும் திட்டமிட்ட குற்றச்செயல் தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகம் தகவல் தெரிவித்துள்ளது.