Breaking News

கட்டார் பயணமாம் - ஜனா­தி­பதி

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நாளை செவ்வாய்க்கிழமை உத்­தி­யோ ­க­பூர்வ விஜயம் மேற்­கொண்டு கட்டா ர் செல்­ல­வுள்ளார். கட்டார் செல்லும் ஜனா­தி­பதி, அந்­நாட்டுத் தலை­வர்கள் உள்­ளிட்ட முக்­கி­யஸ்­தர்­களை சந்­திக்­க­வுள்­ள­துடன், அங்­குள்ள இலங்­கை­யர்கள் எதிர்­நோக்கும் பிரச்­சி­னைகள் குறித்தும் கலந்­து­ரை­யா­ட­வுள்ளார். 

 இவ்­வி­ஜ­யத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும் நகர திட்­ட­மிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம், சுகா­தார அமைச்சர் ராஜித சேனா­ரத்ன மற்றும் இன்னும் சில அமைச்­சர்­களும் ஜனா­தி­ப­தி­யுடன் இணைந்து கட்டார் செல்­ல­வுள்­ளனர். 

இதே­வேளை, கட்டார் நாட்­டி­லுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் ஆத­ர­வா­ளர்கள் மற்றும் முக்­கி­யஸ்­தர்­களை அமைச்சர் ரவூப் ஹக்கீம் சந்­திக்­க­வுள்ளார். எதிர்­வரும் 25ஆம் திகதி சல்வா வீதியில், அன்சார் சிட்­டிக்கு பின்னால் அமைந்­துள்ள பீனிக்ஸ் பாட­சா­லையில் மு.ப. 09 மணி தொடக்கம் நண்பகல் 12 மணிவரை இச்சந்திப்பு நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.