Breaking News

வாக்­க­ளித்த எமக்கு விடிவை தாருங்கள் : அரசியல் கைதிகளின் தாய்மார் ஜனாதிபதியிடம்

கடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் நாம் உங்­க­ளுக்­குத்தான் வாக்­க­ளித்தோம். சிறையில் உள்ள எமது பிள்­ளைகள் உங்­க­ளுக்கு வாக்­க­ளிக்­கு­மாறே எம க்கு கூறி­யி­ருந்­தனர். அவ்­வாறு உங்­களை ஆத­ரித்த எமது பிள்­ளை­க­ளுக்கு நீங்கள் விடிவைத் தர­வேண்டும் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் அநு­ரா­த­புரம் சிறைச்­சா­லையில் உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தில் ஈடு­பட்­டுள்ள அர­சியல் கைதி­களின் தாய்மார் கண்ணீர் மல்க கோரி­யுள்­ளனர். 

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை வட­மா­காண சபை ஆளுநர் ரெஜினோ ல்ட் குரேயின் ஏற்­பாட்டில் அநு­ரா­த­புரம் சிறைச்­சா­லையில் உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தில் ஈடு­பட்­டுள்ள இரு அர­சியல் கைதி­களின் தாய்­மாரும் மற்­றொரு அர­சியல் கைதியின் மனை­வியும் சந்­தித்து கலந்­து­ரை­யா­டினர். 

இந்த சந்­திப்பில் மாகா­ண­சபை உறுப்­பினர் எம். கே. சிவா­ஜி­லிங்கம் உட்­பட பல ரும் பங்­கேற்­றி­ருந்­தனர். இதன்­போது ஜனா­தி­பதி அர­சியல் கைதி­களின் தாய்­மார்கள், மற்றும் மனை­வி­யிடம் கருத்­துக்­களை கேட்­ட­றிந்­தி­ருந்தார். இதன்­போது அர­சியல் கைதி­களின் தாய்மார் கண்ணீர் மல்க தமது பிள்­ளை­களை காப்­பாற்­று­மாறு ஜனா­தி­ப­தி­யிடம் மன்­றா­டினர். 

எமது பிள்­ளைகள் பல வரு­டங்­க­ளாக சிறையில் வாடு­கின்­றனர். அவர்­க­ளது வழக்­குகள் வவு­னியா மேல் நீதி­மன்­றத்­தி­லி­ருந்து அநு­ரா­த­புரம் மேல்­நீ­தி­மன்­றத்­திற்கு மாற்­றப்­பட்­டுள்­ளன. 

எனவே எமது மகன்­மா­ரது கோரிக்­கை­களை நீங்கள் நிறை­வேற்­ற­வேண்டும். கடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் உங்­க­ளுக்கே நாம் வாக்­க­ளித்­தி­ருந்தோம். சிறையில் உள்ள எமது பிள்­ளைகள் உங்­க­ளுக்கே வாக்­க­ளிக்­கு­மாறு எம்மிடம் கூறியிருந்தனர். 

உங்களை ஆதரித்த எங்களுக்கு நீங்கள் விடிவைப் பெற்றுத்தரவேண்டும் என்று தாய்மார் ஜனாதிபதியிடம் கண்ணீர் விட்டு அழுது கோரிக்கை விடுத்து ள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.