Breaking News

அர­சியல் ரீதி­யாக தீர்­மானம் எடுத்து கைதி­களை உடன் விடு­வி­யுங்கள்

வழக்­கு­களை அனு­ரா­த­பு­ரத்­திற்கு மாற்­றி­யமை முரண்­பா­டு­களை தோற்­று­வித்­துள்­ளது; 

ஜனா­தி­ப­திக்கு சம்­பந்தன் கடிதம் பய ங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் தடு த்து வைக்­கப்­பட்­டுள்ள தமிழ் அர­சி யல் கைதிகள் விட­யத்தில் அர­சியல் ரீதி­யான முடி­வினை எடுத்து அவர்­களை தாம­த­மின்றி விடு­தலை செய்ய வேண்டும் என்று கோரி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு எதிர்க்­கட்சித் தலை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் கடிதம் ஒன்றை அனுப்­பி­வைத்­துள்ளார். 

சில அர­சியல் கைதி­க­ளது வழக்­குகள் வவு­னி­யா­வி­லி­ருந்து அனு­ரா­த­பு­ரத்­திற்கு மாற்­றப்­பட்­டுள்­ள­மை­யினால் முரண்­பா­டுகள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. இந்த விடயம் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் இந்தக் கடி­தத்தில் சம்­பந்தன் வலி­யு­றுத்­தி­யுள்ளார். 

இது ­கு­றித்து ஜனா­தி­ப­திக்கு எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்தன் அனுப்பி வைத்­துள்ள கடி­தத்தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, பயங்­க­ர­வாதத் தடுப்புச் சட்­டத்தின் கீழ் தடுப்­புக்­கா­வலில் வைக்­கப்­பட்­டுள்ள தமிழ் அர­சியல் கைதிகள் நீண்­ட­கா­ல­மாகத் தமது விடு­விப்பைக் கோரி வரு­கின்­றனர். 

அவர்­களின் சார்­பாக இந்தக் கடி­தத்தை எழு­து­கின்றேன். பின்­வரும் விட­யங்­களைத் தெரி­விக்க விரும்­பு­கின்றேன்:- 

 (1) பயங்­க­ர­வாதத் தடுப்புச் சட்­டத்தின் கீழ் தடுப்­புக்­கா­வலில் வைக்­கப்­பட்­டுள்ள இந்தக் கைதிகள், தண்­டனை விதிக்­கப்­பட்­ட­வர்­க­ளா­கவோ, குற்­றஞ்­சாட்­டப்­பட்­ட­வர்­க­ளா­கவோ அல்­லது இன்­ன மும் குற்­றச்­சாட்­டுக்கள் வழங்­கப்­ப­டா­த­வர்­க­ளா­கவோ இருந்­தாலும் அவர்கள் அனை­வரும் பயங்­க­ர­வாதத் தடைச் சட்­டத்தின் கீழேயே கைது செய்­யப்­பட்­டார்கள் என்­ப­துடன், அவர்­க­ளுக்கு எதி­ரான சகல நட­வ­டிக்­கை­களும் அச்­சட்­டத்தின் கீழேயே மேற்­கொள்­ளப்­பட்­டன. 

(2) இந்தப் பயங்­க­ர­வாதத் தடுப்புச் சட்டம் கொடூ­ர­மான, வெறுக்­கத்­தக்க ஒரு சட்டம் என்­பதும் அது காலத்­துக்குப் பொருத்­த­மற்­ற­தென்­பதும் இலங்கை அர­சினால் உள்­நாட்­டிலும் சர்­வ­தேச ரீதி­யிலும் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

இந்தச் சட்­டத்தை நீக்­கி­விட்டு அதற்குப் பதி­லாக உள்­நாட்டு மற்றும் சர்­வ­தேச நிய­மங்­க­ளுக்கு ஏற்­பு­டைய வகையில் புதிய சட்­ட­மொன்றை உரு­வாக்கப் போவ­தாக உள்­நாட்­டிலும் சர்­வ­தேச மட்­டத்­திலும் அர­சாங்கம் உறுதி வழங்­கி­யி­ருந்­தது. 

(3) இந்த உறு­தி­ய­ளிக்­கப்­பட்ட கடப்­பாட்டை இலங்கை அரசு இன்­னமும் நிறை­வேற்­ற­வில்லை. ஆனாலும், இதன்­மூலம் குறித்த சட்டம், சட்டப் புத்­த­கங்­களில் தொடர்ந்­தி­ருக்க மாட்­டா­தென்ற இலங்கை அரசின் உறு­தி­ய­ளிக்­கப்­பட்ட கடப்­பாட்­டி­லி­ருந்து தவற முடி­யாது. 

(4) இந்த நபர்­களில் அனே­க­மா­ன­வர்­க­ளுக்கு எதி­ராக இருக்கும் ஒரே­யொரு சான்று அவர்­களின் விருப்­பத்­துக்கு மாறாகப் பயங்­க­ர­வாதத் தடைச் சட்­டத்தின் கீழ் பெறப்­பட்ட குற்ற ஒப்­புதல் வாக்­கு­மூலம் மட்­டுமே என்­ப­தோடு, அது சாதா­ர­ண­மான நீதி­மன்­றத்தில் அவர்­க­ளுக்கு எதி­ரான சாட்­சி­ய­மாக ஏற்­கப்­ப­ட­மாட்­டாது. இதனால் வழக்குத் தொடு­நர்­க­ளிடம் போதிய சாட்­சி­யங்கள் இல்­லாமை கார­ண­மாக அனேக வழக்­குகள் ஒத்­தி­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன. 

(5) அனே­க­மாக இவர்கள் எல்­லோ­ருமே அவர்கள் கைது செய்­யப்­பட்­ட­வுடன் குற்றத் தீர்ப்பு வழங்­கப்­பட்­டி­ருந்தால் சிறை­வாசம் அனு­ப­விக்க வேண்­டிய காலத்தைப் போன்ற நீண்ட காலத்­திற்குத் தடுப்­புக்­காவல் கைதி­க­ளா­கவே இரு க்­கின்­றனர். 

(6) தடுப்­புக்­கா­வலில் வைக்­கப்­பட்­டுள்ள இவர்­களின் குடும்­பங்கள் அவர்­களின் உழைப்­பாற்றல் ஆத­ரவு இல்­லாமல், நீண்­ட­கா­ல­மாக வேத­னையில் வாடு­கின்­றன. மிகவும் காத்­தி­ர­மான இம் முக்­கிய விட­யத்­திற்கு இது­வரை கவனம் செலு த்­தப்­ப­ட­வில்லை. 

(7) பயங்­க­ர­வாதத் தடுப்புச் சட்­டத்தின் தீய அம்­சங்­க­ளுக்கும் புறம்­பாக, மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யினர் (ஜே.வி.பி.) கிளர்ச்­சி­களை மேற்­கொண்ட வேளையில் கைது செய்­யப்­பட்­ட­வர்கள் யாவரும் மன்­னிப்­ப­ளிக்­கப்­பட்டு விடு­தலை செய்­யப்­பட்­டனர். 

இதே­போன்ற ஒரு கொள்­கையை தற்­போ­துள்ள இந்தக் கைதிகள் விட­யத்­திலும் செயற்­ப­டுத்த முடி­யா­ம­லி­ருப்­பது ஏன் என்­பதை விளங்­கிக்­கொள்ள முடி­யா­துள்­ளது. 

(8) இந்த வழக்­குகள் முழு­மை­யாகச் சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்தின் பொறுப்பில் உள்­ள­வை­யென்­ப­தாகக் கருத முடி­யாது. அரசின் முதன்மைச் சட்ட ஆலோ­சகர் என்ற வகையில் சட்­டமா அதி­ப­ருக்­கு­ரிய கௌர­வத்தை வழங்கும் அதே­வேளை, இவ்­வ­ழக்­குகள் அர­சியல் அடை­யா­ளங்­க­ளையும் கொண்­டி­ருப்­ப­தனால் இவை முழு­மை­யாகச் சட்டம் சம்­பந்­தப்­பட்­ட­வை­யென்று கரு­தி­விட முடி­யாது. 

இலங்­கையின் தேசியப் பிரச்­சி­னைக்கு உரிய நேரத்தில் தீர்வு காணப்­பட்­டி­ருந்தால், கைதி­க­ளாக உள்­ள­வர்­களில் அனே­க­மா­ன­வர்­க­ளுக்கு தற்­போது ஏற்­பட்­டுள்ள நிலைமை ஏற்­பட்­டி­ருக்க மாட்­டா­தென்­பதும் அவர்கள் பய­னுள்ள பிர­ஜை­க­ளாக இருந்­தி­ருப்­பார்கள் என்று கூறு­வதில் நியா­ய­மி­ருப்­பதைத் தெரி­விக்க முடியும். 

இத்­த­கைய சூழ்­நி­லையில், தாங்கள் இந்த விட­யத்தை அர­சியல் ரீதி­யா­கவும் நோக்க வேண்­டிய கடப்­பாட்டை உரு­வாக்­கி­யுள்­ளது. 

இந்த விடயம் அர­சியல் ரீதி­யாகக் கையா­ளப்­ப­டா­ம­லி­ருப்­பது இன இணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­திலும், நன்­ம­திப்­பையும் அமைதி நிலை­மை­யையும் மீள ஏற்படுத்துவதிலும் வலுவான தடையாகவே அமையும். 

(9) சில வழக்குகள் வவுனியாவில் இருந்து அனுராதபுரத்திற்கு இடமாற்ற ப்பட்டதன் மூலம் சில தேவையற்ற முரண்பாடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 

சாட்சிகளுக்குப் பாதுகாப்பு அவசியமாயின் வழக்குகளை இடமாற்றம் செய்யா மல், சாட்சிகளுக்கான பாதுகாப்புக்களை வழங்கியிருக்க முடியும். இந்தக் கைதிகள் மேலும் தாமதமின்றி விடுவிக்கப்பட வேண்டுமென நான் வலுவான கோரிக்கையை விடுக்கின்றேன். 

இந்தக் கடிதத்தின் பிரதிகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நீதியமைச்சர் தலதா அத்துக்கோரள ஆகியோருக்கும் சட்ட மா அதிபருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ள.