விடுதலைப் புலிகளுக்கு பாதைகாட்டிய முதியவர் தொடர்பாக - அமைச்சர் அனந்தி!
தமிழீழ விடுதலைப் புலிகளுக்குப் பாதை காட்டியதாக குற்றம் சுமத்தி 66 வயதான முதியவர் சிறையில் சிறை யிடப்பட்டுள்ளதாக வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவி த்துள்ளார்.
குறித்த முதியவர் கடந்த ஒன்பது ஆ ண்டுகளாக அரசியற்கைதிகள் என்ற போர்வையில் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். இலங்கை சிறைகளில் அடைத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பாக செவ்வி வழங்கியபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், ”பன்னிரண்டாயிரம் விடுதலைப்புலிகளை குடும்பங்களுடன் இணை த்துள்ள அரசாங்கத்திற்கு 160 பேரை விடுதலை செய்வதென்பது பாரதூரமான பிரச்சினையல்ல.”
எனத் தெவித்த அமைச்சர், “தயா மாஸ்டர், கருணா ஆகியோர் விடுதலை யாகிய நிலையில் அப்பாவி அரசியல் கைதிகளை ஏன் விடுவிக்க முடியாது?’
என்ற கேள்வியினையும் எழுப்பியுள்ளார்
.
அநுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த 14 நாட்களாக உண்ணாவிரதமிருந்து வரும் அரசியல் கைதிகளின் பிரச்சினைக்கு உடனடி தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் என்பதோடு, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இதுகுறித்து உடனடியாக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சட்டமா அதிபருடன் கலந்துரையாடி அரசியல் கைதிகள் அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்க முன்வர வேண்டுமென நிபந்தனை விதித்துள்ளார்.
இலங்கையில் போர் நடைபெற்ற காலத்தி ல் விடுதலைப்புலிகளுக்கு உதவிய குற்ற ச்சாட்டில் கைது செய்யப்பட்ட பலர் தசாப்த ங்கள் கடந்தும் எவ்வித விசாரணைகளு மின்றி சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டு ள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.