Breaking News

முதலமைச்சர் மீதான குற்றச்சாட்டின் பின்னணியில் இருப்பது தான் என்ன?

வடமாகாண முதலமைச்சர் மீது நம்பி க்கை அற்ற முடிவை எடுத்து வந்து ஆளுநரிடம் சென்று அடைக்கலம் தேடியதும், தமிழ்மக்கள் முதல்வரு க்கு ஆதரவாக திரண்டபோது, அத னைக் கைவிட்டு தமது வாலைச் சுரு ட்டி பதுங்கியதும் அனைவரும் அறி ந்த செய்தி. 

ஆனால் அந்த நேரத்தில்அதனை ஊதிப்பெருப்பித்து தங்கள் நுண்ணரசியலை நகர்த்தியவர்களின் பின்னனி எவ்வளவு ஆபத்தானது என்பதை அறிந்து கொள்ள, கனடாவிலிருந்து ஆங்கில பத்தி ஆக்கங்களை எழுதும் டிபிஎஸ் ஜெயராஜின் பதிவு முக்கியமானது. 

அவரது செய்தியில், முதலமைச்சரும் 50000 கனடா டொலர்களை சுட்டு விட்டதாக தனது வழமையான கதையை எழுத, அதனை மொழி பெயர்த்து சில இணையத்தளங்கள் முக்கியத்து வம் கொடுத்து செய்தியாக பரிமாறின.

அதனைத் தொடர்ந்து, எப்போதும் தமிழர்களை தேசியம் பேசி ஏமாற்றலாம் என எண்ணும் சிறிதரனும் அதனை ஊர் ஊராக  பிரசங்கம் தொடுத்தார். இது நடந்து இப்போது நான்கு மாதங்கள் கடந்து விட்டன. 

குறித்த செய்தி தொடர்பாக, கனடா சட்டவாளர்களால் சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டதை தொடர்ந்து, தற்போ து அச் செய்திக்காக, பகிரங்க மன்னி ப்பு கோரியுள்ளார் டிபிஎஸ் ஜெயராஜ். இதே டிபிஜெயராஜ் தான், சுமந்திரனு க்கு பதுங்கி பதுங்கி முன்னாள் புலி கள் கிளைமோர் வைக்கிறார்கள் என பந்தி பந்தியாக எழுதி பல அப்பாவிகள் கைதுசெய்யப்பட்டதை, சர்வதேச உலகில் நியாயப்படுத்தியவர். அப்படி கைதுசெய்யப்பட்டவர்களை, தொடர்ந்து ம் சிறைகளில் வைத்திருக்க முடியாதென ஒரு தமிழ் நீதிபதி கண்டறிந்த தாலேயே, அவர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டமை இன்னொரு செய்தி. 

 இரண்டாவது விடயமாக,

டெனிஸ்வரன் பதவி விலக்கப்பட்டமை தொ டர்பாக முதல்வருக்கு எதிரான வழக்கை, சுமந்திரனின் தூண்டுதலின் பேரில், அவரது கனிஸ்ட சிங்கள சட்டத்தரணிகளால் நீதிம ன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்ப ட்டது. 

அமைச்சரை நீக்கும் அதிகாரம் ஆளுநருக்கே உண்டு எனவும் முதலமைச்சருக்கு அதிகாரம் இல்லையென  தீர்ப்பு வழங்கு மாறு கோரிக்கை விடுக்கப்பட்டமை. இது சிங்களத்திடம் எங்கள் தமிழ் பிரதி நிதிகள், முதல்வரை நீக்குவதற்காக மண்டியிட்ட இரண்டாவது சந்தர்ப்பம். அதுவும் அவர்களுக்கு கைகூட வில்லை.

 இனி என்ன செய்வார்கள்? 

இப்படி முதல்வரை விழுத்தவேண்டுமென இவர்கள் செயற்படுவதன் நோக்கம் என்ன? 

தங்கள் மூக்குப் போனாலும் எதிரிக்கு சகுனம் பிழைக்கவேண்டும் என்பத ற்காக ஒரு இனத்தின் தலைவிதியையே அடகு வைக்கிறார்களே ஏன்?