“அரசியல் பழிவாங்கலே” - முன்னாள் ஜனாதிபதி மகிந்த
அம்பாந்தோட்டையில் நேற்றைய தினம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை அடுத்து தங்காலை சிறையில் அடை த்து வைக்கப்பட்டிருப்பவர்கள பார் வையிடுவதற்காக முன்னாள் ஜனாதி பதி மகிந்த ராஜபக்ச நேற்று (21) சிறை க்குச் சென்றிருந்தார். அதன்பின் ஊட கவியலாளர்களிடம் பேசிய அவர், பாராளுமன்ற உறுப்பினர்கள் போரா ட்டம் நடத்தும் உரிமையைக் கூட தற்போதைய அரசாங்கம் கொடுக்க மறுப்பதாக தெரிவித்துள்ளார். “பிரேம தாசவோ, ஜே.ஆர். ஜயவர்தனவோ பாராளுமன்ற உறுப்பினர்களை சிறையில் அடைத்ததில்லை. நான் எத்தனையோ ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், மனி தச் சங்கிலிப் போராட்டங்கள் நடத்தியிருக்கிறேன். அப்போதெல்லாம் அவ ற்றை மேற்கொள்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் அனுமதிக்கப்பட்டிரு ந்தார்கள்.
“வாக்குரிமையைப் பறித்துக்கொண்டு, மறுபுறம் இதுபோன்ற அடிப்படை உரிமைகளைக் கூடப் பறித்து கல்வீசுவது யார் என்பது இப்போது தெளிவாக புலனாகின்றது.
“இரண்டு தட்டு வீடு ஒன்றில் இருந்துகொண்டு செய்த வேலைகளெல்லாம் நான் பார்த்திருக்கிறேன். ஆர்ப்பாட்டக்காரர்களைச் சிறையில் அடைப்பதெ ல்லாம் அரசியல் ரீதியான பழிவாங்கல்களே.”
மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதேவேளை, சிறையில் அடைக்கப்பட்டி ருப்பவர்களின் உறவினர்களைச் சந்திப்பதற்காக, கூட்டு எதிரணியின் பாரா ளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அவர்களது வீடுகளுக்கு விஜயம் ஆகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.