புதுக்குடியிருப்பில் வாள்வெட்டுத் தாக்குதல் - ஒருவர் படுகாயம்
புதுக்குடியிருப்பு, இரணைப்பாலை பாண்டியன் வீதி பகுதியில் நேற்று இரவு வாள்வெட்டுத் தாக்குதல் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரவு குறித்த பாண்டியன் வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இரண்டு இளைஞர்கள் மீதும் இனம் தெரியாத நபர்கள் வாள்வெட்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இச்ச ம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தவர்களில் ஒருவர் படுகா யங்களுக்கு உள்ளாகியதுடன் தாக்குதலை நடத்தியவர்கள் உடனடியாகவே அப் பகுதியிலிருந்து தப்பித்துள்ளனர்.
இதில் படுகாயமடைந்த நபர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்.
காயமடைந்தவரின் தலைப்பகுதியில் காட்டுக் கத்தி யால் மிகவும் மோசமான முறையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச்சம்ப வம் குறித்து புதுக்குடியிருப்பு பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடு த்துள்ளனர்.