சமஷ்டியை வழங்கினால் வடக்கில் என்ன நடக்கும்? : கறுப்புபட்டி போராட்டம் சிறந்த ஒத்திகை என்கிறார் கெஹலிய
சமஷ்டி முறைமையில் நாட்டின் தேசிய பிரச்சினைக்கு தீர்வு கண் டால் என்ன நடக்கும் என்பதற்கான ஒரு ஒத்திகையையே நாம் கடந்த
சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் கண்டோம்.
வடக்கு முதலமைச்சருக்கு
பொலிஸ் அதிகாரம் இருந்திருந்தால் அன்று என்ன நடந்திருக்கும் என்பதை எம்மா ல் புரிந்துகொள்ள முடிகின்றது என்று
கூட்டு எதிரணியின் முக்கியஸ்தர் பாராளுமன்ற
உறுப்பினர் கெஹெலி ய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
அத்துடன் ஒருமித்த நாடு என்பது சமஷ்டிக்கு ஒப்பானதாகும். எனவே இதனை அடிப்படையாகக் கொண்டு அரசியலமைப்பை தயாரித்து சர்வஜனவாக்கெடுப்புக்கு விடுவது அபாயகரமானதாகும். இது வெற்றியடைந்தாலும் தோல்வியடைந்தாலும் அது நாட்டின் ஒற்றுமை க்கு பாதகமாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த சனிக்கிழமை ஜனாதிபதியின் யாழ். விஜயத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் மற்றும் ஒருமித்த நாடு என்ற முறைமை என்பன தொட ர்பில் விபரிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கெஹெலியரம்புக்வெல்ல இந்த விடயம் குறித்து மேலும் கூறுகையில்;
கட ந்த சனிக்கிழமை ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்கு சென்றபோது அவருக்கு எதிராக கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்ட சம்பவமானது எமக்கு பல்வேறு செய்திகளை வலியுறுத்துவதாக அமைந்திருக்கிறது.
அதாவது பொலிஸ் அதிகாரம் இல்லாமலேயே வடக்கு மாகாண அரசியல்வாதிகள் இவ்வாறு நடந்துகொள்வதை எம்மால் அவதானிக்க முடிந்தது.
இந்நிலையில் மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட்டால் என்ன நடக்கும் என்பதை எம்மால் புரிந்துகொள்ள முடிகின்றது.
வடக்கு முதலமைச்சருக்கு பொலிஸ் அதிகாரம் இருந்திருந்தால் கடந்த சனிக்கிழமை என்ன நடந்திருக்கும் என்பதனை நாம் நினைத்துப் பார்க்கவேண்டும்.
ஒருவேளை ஜனாதிபதிக்கு வடமாகாணத்திற்கு செல்ல முடியாத நிலைமைகூட ஏற்பட்டிருக்கலாம்.
இதனால்தான் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் மாகாணசபைகளுக்கு வழங்கப்பட முடியாதவை என நாங்கள் கூறிவருகின்றோம்.
மேலும் ஒருமித்த நாடு என்ற விடயத்தைக் கூறி அரசாங்கம் நாட்டு மக்களை ஏமாற்றுகிறது. ஒற்றையாட்சி எனும் பொழுது அந்த நாடு தொடர்பான முழுமையான சட்டங்களும் மத்திய அரசாங்கத்தினால் நிறைவேற்றப்படும்.
ஆனால் ஒருமித்த நாடு அல்லது ஒற்றையாட்சி தவிர்ந்த ஏனைய முறைமைகள் வரும்போது மாநிலங்கள் சட்டங்களை நிறைவேற்றி மத்திய அரசாங்கத்திற்கு அறிவிக்கும் நிலைமை ஏற்படலாம்.
அதனால் தான் நாங்கள் ஒற்றையாட்சி முறைமையிலேயே நாடு நீடிக்கவேண்டும் என வலியுறுத்துகிறோம்.
ஒருமித்த நாடு என்பது அலகுகளின் கூட்டிணைவை குறிக்கின்றது. எனவே இது ஒற்றையாட்சியாகாது.
இதனை வைத்து மக்களை ஏமாற்ற அரசாங்கம் முற்படக்கூடாது.
இதேவேளை இவ்வாறு ஒருமித்த நாடு என்ற அடிப்படையில் புதிய அரசியலமைப்பு தயாரிக்கப்பட்டு சர்வஜன வாக்கெடுப்பிற்கு விடயப்பட்டால் நிச்சயம் அது மக்களால் தோற்கடிக்கப்படும்.
ஆனால் இந்த சர்வஜன வாக்கெடுப்பில் வெற்றி ஏற்பட்டாலும் தோல்வி ஏற்பட்டாலும் அது கூட்டமைப்பிற்கு வெற்றியாகவே அமையும். காரணம் இதில் வெற்றிபெற்றால் கூட்டமைப்பு எதிர்பார்த்த ஆட்சி முறைமை நாட்டில் இடம்பெறும்.
ஒருவேளை சர்வஜன வாக்கெடுப்பு தோல்வி ஏற்பட்டால் அதனை வைத்து தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஐக்கியநாடுகள் பொதுச்சபையில் ஒரு பிரேரணையை முன்வைக்கும்.
அதாவது 70 வருடகாலமாக நாங்கள் அரசியல் அதிகாரத்திற்காக போராடி வருகின்றோம் ஆனால் கிடைக்கவில்லை தற்போது குறைந்தபட்ச அதிகாரமுறை யும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
எனினும் வடக்கு, கிழக்கில் 95 வீதமான மக்கள் இதனை ஆதரித்துள்ளனர். எனவே எமக்கு ஒரு தீர்வைப் பெற்றுத்தாருங்கள் என்று ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு கோரிக்கையை முன்வைக்கும் நிலைமை காணப்படுகின்றது.
இது நாட்டுக்கு பாரிய பாதகத்தை ஏற்படுத்தும். எனவே இதனை சர்வஜன வாக்கெடுப்புக்கு விடுவதும் அபாயகரமானதுதான் என்றார்.