ஒரு நாள் பாடசாலை சென்றால் 100 ரூபா வழங்குவதாக - அகிலவிராஜ் காரியவசம்
வறுமையின் நிமித்தம் பாடசாலை க்குச் சமூகமளிக்காத மாணவர்களு க்கு சிறப்புக் கொடுப்பனவு ஒன்றை வழங்குவதற்கு கல்வி அமைச்சு செய ற்பட முனைந்துள்ளதாக தெரிவிக்க ப்படுகின்றது.
அடுத்த ஆண்டில் நடைமுறைப்ப டுத்த உத்தேசிக்கப்பட்ட இத் திட்டம் ஊடாக மாணவர்கள் இடை விலகல் தடுக்கப்படுவது மட்டுமன்றி, அவர்களின் கல்வி ஆர்வத்தையும் அதிகரிக்க லாமென கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ் பாடசாலை செல்லும் நாளொன்றுக்கு 100 ரூபா வீதம் வழங்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பெற்று வருவதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
அடுத்த வருடத்துக்கான வரவு செலவுத் திட்டத்தில் கலந்தாலோசித்து முடி வெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.