விமல் வீரவன்ச ஜனாதிபதியை நாளை சந்திக்கவுள்ளார்!
தேசிய சுதந்திர முன்னணியின் தலை வரும் ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச வெகு விரைவில் ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேசவுள்ளார்.
ஜனாதிபதியை தனிப்பட்ட ரீதியில் சந்திப்பதற்கான கோரிக்கையை நா டாளுமன்ற உறுப்பினர் விமல் வீர வன்ச, கடந்த செப்டம்பர் மாதம் 15ஆம் திகதி அனுமதி விண்ணப்பம் விடுத்தி ருந்தார்.
இந் நிலையில் குறித்த விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன, நாளைய தினம் தன்னை சந்திப்பதற்கான சந்தர்ப்பத்தை விமல் வீரவன்சவுக்கு அளித்துள்ளார்.
புதிய அரசியலமைப்பு உருவாக்கம், நாட்டைப் பிளவுபடுத்தும் யோசனைகள், காணாமல் ஆக்கப்படுதல் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், காணாமல் போனோர் அலுவலகம் உள்ளிட்ட பல விடயங்கள் கலந்துரையாட எதிர்பார்ப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச சிங்கள ஊடகத்திற்கு கருத்து வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.