தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு நடத்தக்கோரி தொடர் பிரச்சாரம்
இலங்கைத்தீவின் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு ஈழத் தாயகப் பகுதிகளிலும், ஈழத் தமிழ் மக்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளிலும் பொது வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்ற அரசியல் பரப்புரை இயக்கத்தை நாடு கடந்த தமிழீழ அரசு உலகமெங்கும் விரிவுபடுத்துவ தற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
நாடு கடந்த தமிழீழ அரசின் பெருஞ்செயற்றிட்டங்களில் ஒன்றாக உள்ளடக்கப்பட்டுள்ளது. இந்தச் செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நாடு கடந்த தமிழீழ அரசின் தலைமை அமைச்சர் வி.ருத்ரகுமாரன் தலைமையில் செயற்குழு அமைக்கப்பட்டுள்ளது.
<
இந்தத் திட்டத்தை ஒருங்கிணைத்து வழிநடத்துவதற்கு தலைமை அமைச்சர் பணி மனையில் ஒருங்கிணைப்புச் செயலகமும் அமைக்கப்பட்டுள்ளது.