Breaking News

புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பாக வழி நடத்தும் குழுவின் இடைக்­கால வரைவில்

புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பாக வழி நடத்தும் குழுவின் இடைக்­கால வரைவில் புதிய சொற்கள் உள்­வாங்­கப் பட்­டுள்­ளமை சந்­தே­கங்­களை தோற்­றுவித்­துள்­ளது. மேலும் இடைக்­கால வரைவு குறித்த தேவை­யான யோச­னை­க­ளையும் பரிந்­து­ரை­க­ளையும் இவ்­வா­ரத்தில் மல்­வத்து மற்றும் அஸ்­கி­ரிய பீடங்கள் அர­சாங்­கத்­திற்கு அறி­விக்கும் என அஸ்­கி­ரிய பீடத்தின் அநு­நா­யக மெத­ கம தம்­மா­னந்த தேரர் குறிப்­பிட்டார். 

சமஷ்டி முறை­மைக்கு நாட்டை நகர்த்தக் கூடிய வகையில் பல்­வேறு விட­யங்கள் மற்றும் சொற்கள் புகுத்­தப்­பட்­டுள்­ள­தாக எழுப்­பப்­படும் குற்­றச்­சாட்­டுக்கள் குறித்து ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கவனம் செலுத்த வேண்டும். 

புதிய அர­சி­ய­ல­மைப்பு விவ­காரம் நாட்டில் அர­சியல் குழப்­பத்­துக்குக் கார­ண­மாகி விடக் கூடாது எனவும் அவர் குறிப்­பிட்டார். இந்த விடயம் தொடர்பில் அஸ்­கி­ரிய பீடத்தின் அநு­நா­யக மெத­கம தம்­மா­னந்த தேரர் மேலும் கூறு­கையில், புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பான வழி நடத்தல் குழுவின் இடைக்­கால அறிக்கை தொடர்பில் மல்­வத்து மற்றும் அஸ்­கி­ரிய பீடங்கள் ஆராய்ந்து வரு­கின்­றன. 

ஒற்­றை­யாட்­சிக்கும் தேசிய பாது­காப்பு மற்றும் பௌத்த மத­தத்­திற்­கான சிறப்­பு­ரி­மை­க­ளுக்கும் இது­வ­ரையில் காணப்­பட்ட அதி­கா­ரங்கள் மற்றும் சிறப்­பு­ரி­மை­களில் எவ்­வி­த­மான மாற்­றங்­களும் ஏற்­ப­டுத்­தப்­படக் கூடாது. 

ஆனால், பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க தலைமை தாங்கும் புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பான வழி நடத்தல் குழு தற்­போது முன்­வைத்­துள்ள இடைக்­கால அறிக்­கையில் சொற்­களில் மாற்­றங்கள் கொண்டு வரப்­பட்­டுள்­ளன. 

நாட்­டிற்கு புதிய அர­சி­ய­ல­மைப்பு ஒன்று தேவைப்­படும் போது அதனை அனைத்து தரப்­பு­களின் அனு­ம­தி­யுடன் கொண்டு வர வேண்டும். அதில் எவ்­வி­த­மான தவறும் இல்லை. 

ஆனால் முக்­கி­யத்­துவம் அளிக்­கப்­பட வேண்­டிய விட­யங்­களில் பல்­வேறு வகையில் அர்த்­தங்­களைத் தரக்­கூ­டிய சொற்­களைப் பயன்­ப­டுத்தி அர­சாங்கம் குழப்­பத்தை உரு­வாக்­கவோ அல்­லது நம்­பிக்­கையை இழந்து விடவோ கூடாது. 

வழி நடத்தல் குழுவின் இடைக்­கால அறிக்கை எமக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. அவற்றை கவ­னத்தில் கொண்ட போது பௌத்த மதத்­திற்­கான முக்­கி­யத்­துவம் மற்றும் ஒற்­றை­யாட்சி முறைமை உள்­ளிட்ட பல முக்­கிய விட­யங்­க­ளுக்கு சவால் ஏற்­ப­டுத்தும் வகையில் பல்­வேறு அர்த்­தங்­களை தரக்­கூ­டிய சொற்கள் புகுத்­தப்­பட்­டுள்­ளன. 

 மேலும் பல்­வேறு நிபு­ணர்­களைக் கொண்டு புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பான வழி நடத்தல் குழுவின் இடைக்­கால அறிக்­கையை ஆராய்ந்து வரு­கின்றோம். பெரும்­பாலும் இந்த வார இறு­தியில் எமது நிலைப்­பாட்டை அர­சாங்­கத்­திற்கு அறி­விக்க உள்ளோம். 

மற்­று­மொரு முக்­கிய விடயம் யாதெனில் சமஷ்டி முறை­மைக்கு நாட்டை நகர்த்தக் கூடிய வகையில் பல்­வேறு விட­யங்கள் புகுத்­தப்­பட்­டுள்­ள­தாக குற்­றச்­சாட்­டுக்கள் காணப்­ப­டு­கின்­றன. 

ஆனால் இடைக்­கால அறிக்­கையில் சமஷ்டி பரிந்­து­ரை­யில்லை என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்ளார். எவ்­வா­றா­யினும் புதிய அர­சி­ய­ல­மைப்பு விட­யத்தில் பொறுப்­பு­ணர்­வுடன் செயற்­பட வேண்­டி­யது அனை­வ­ரி­னதும் கட­மை­யாகும். 

ஜனா­தி­ப­திக்கு தெரி­யாது பல்­வேறு விட­யங்கள் இடைக்கால அறிக்கையில் காணப்படுமாயின் அரசாங்கம் தொடர்பிலான மக்களின் நம்பகத் தன்மையில் பாதிப்பு ஏற்படும். 

புதிய அரசியலமைப்பு தொடர்பான பணிகளை வேறு யாராவது செய்வதும் அது குறித்த தகவல்களை தொலை பேசியில் அறிவதுமாக நாட்டின் தலை வரின் நடவடிக்கைகள் காணப்பட்டால் அநாவசியமான சந்தேகங்களே உருவா கும் என்றார் .